Sunday, April 22, 2012

'Ramanujar 1000' in Tamil : Book release invitation

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

SrivaishnavaSri A.Krishnamchari's "Ramanujar 1000" book in Tamil, an encyclopedia on Ramanujar is scheduled to be released on April 25 at SriperumdhUdhUr. Kindly grace the occasion with your presence. We are also trying for an live audio webcast of the function on the day. To pre-order a copy of the book, please contact "SrivaishnavaSri" ( details below)

நந்தன ஆண்டு சித்திரை மாதம் 13ஆம் நாள் புதன் கிழமை (25.4.2012) "இராமாநுசர் ஆயிரம்' என்ற நூலின் முதல் மூன்று பாகங்கள் வெளியிடப்பட உள்ளன.

*ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால இராமாநுஜ ஜீயர் ஸ்வாமி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில்

*ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி
யதிராஜஜீயர் ஸ்வாமி
* ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப இராமாநுஜ ஜீயர் ஸ்வாமி 23 வது பட்டம் ஸ்ரீமணவாள மாமுனிகள் மடம் ஸ்ரீவில்லிபுத்தூர்

ஆகியோர்கள் எழுந்தருளி விழாவினைச்
சிறப்பிக்க உள்ளனர்.

25.4.2012 அன்று மலை 4 மணிக்கு ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வெளியீடான "இராமாநுசர் ஆயிரம்' (முதல் மூன்று பாகங்கள்) 671 தலைப்புகள் கொண்ட நூல் வெளியீடு. ஸ்வாமி எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு அவதார திருநக்ஷத்திர உத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக "இராமாநுசர் ஆயிரம்' என்ற நூல் (9 பாகங்கள்) நந்தன
மற்றும் விஜய ஆண்டுகளில் (கி.பி. 2012 மற்றும் 2013) வெளிவரஉள்ளன.

இராமாநுசரின் வாழ்க்கை வரலாறு, அவர் அருளிச் செய்த நூல்கள், அவருடைய பெருமைகளை பறைசாற்றும் துதிநூல்கள், இராமாநுசருடைய சமுதாயச் சிந்தனைகள், கோயில் நிர்வாகச் சீர்திருத்தங்கள், அர்ச்சையில் அவருக்கு நடைபெறும் வைபவங்கள், அவர் அருளிச்செய்த வேதாந்த ஸாரம் என்னும் நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கலைக்களஞ்சியமாக இந்த நூலின் முதல் மூன்று பாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு குடைக்கீழ் அனைத்து குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு வெளியீட்டில் இராமாநுசர் அருளிச்செய்த வேதாந்த ஸாரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு வெளியீட்டில் இராமாநுசருடைய மற்றைய க்ரந்தங்களான வேதார்த்த ஸங்க்ரஹம், ஸ்ரீபாஷ்யம், வேதாந்ததீபம், கத்யத்ரயம், நித்யம் ஆகியவற்றின் தமிழ்
மொழிபெயர்ப்பு, இன்னும் சில வரலாற்று நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகள், பல திவ்யதேசங்களில் இராமாநுசருடைய அர்ச்சா திருமேனிக்கு அளிக்கப்பட்டு வரும்
மரியாதைகள், இராமானுசரின் சீரிய மேலாண்மைக் கொள்கைகள், இராமாநுஜ ஸம்பிரதாயம் தமிழ்நாடு தவிர்ந்த மற்றைய தென் வடமாநிலங்களில் நிலை கொண்ட விதம் ஆகியவை இடம் பெற உள்ளன.

To (pre-order)purchase a copy of the book, Contact :

www.srivaishnavasri.com
www.fb.com/srivaishnavasri
E-mail : admin@srivaishnavasri.com
Call us : +91-(0)-431-2434398
214, East Uthira Street, Srirangam

0 comments:

Post a Comment