Showing posts with label Thirukkannamangai Sri Bakthavathsala Perumal. Show all posts
Showing posts with label Thirukkannamangai Sri Bakthavathsala Perumal. Show all posts

Wednesday, May 7, 2014

Thirukkannamangai, Sri Bakthavathsala Perumal Brahmothsavam Day 1

Thanks to Rajagopalan Tsr swami for sharing the photos.

பெரும்புறக்கடலை அடலேற்றினைப்*
பெண்ணை யானை* எண்ணில் முனிவர்க்கருள் தருந்தவத்தை முத்தின் திரட்கோவையை* பத்தராவியை நித்திலத் தொத்தினை* அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை* அமுதம் பொதியின் சுவைக் கரும்பினை* கனியைச் சென்று நாடிக்* கண்ணமங்கையுட் கண்டு கொண்டேனே*

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதான " திருக்கண்ணமங்கை " திவ்ய தேசத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் " ஸ்ரீ அபிஷேக வல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு" நேற்று ஸ்ரீ ஜய வருஷம் சித்திரை மாதம் 26 ந் தேதி (05.05.2014) திங்கட்கிழமை மாலை " சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில்" தொடக்கமாக ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம் வெகு விமரிசையாக தொடங்கிற்று.

இன்று ஸ்ரீ ஜய வருஷம் சித்திரை மாதம் 23 ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.22 - 9.30 மணிக்குள் " மிதுன லக்னத்தில்" த்வஜாரோஹணம் சிறப்பான முறையில் நடந்தது. அதற்கு முன் காலை 7.45 மணிக்கு யாகசாலையிலிருந்து " கருடக் கொடி" வீதியுலா வந்து சரியாக 8.15 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி த்வஜஸ்தம்பம் அருகில் ஏளி ஸ்ரீ பெருமாள், கொடி க்கு திருவந்திக்காப்பு ஆகி மல்லாரியுடன் த்வஜாரோஹணம் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று மாலை சுமார் 7 மணியளவில் " ரக்ஷா பந்தனம்" ஆகி ஸ்ரீ பக்ஷிராஜன், ஸ்ரீ விஷ்வக்ஷேணர், ஸ்ரீ சக்ரத்தாழ்வார் புறப்பாடாகி " திக் பந்தனம்" ஆகி ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ உபயநாச்சிமார்களுடன் " கோ " ரதத்தில் திருவீதியுலா கண்டருளினார். பின் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், உபய நாச்சியார்க, ஸ்ரீ ஆண்டாளுடன் “ நூதன கண்ணாடி திருப்பள்ளி அறை” யில் திருப்பள்ளியறை சேவை நடந்தது. அவ்வமயம் ஏராளமான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.





































Monday, December 16, 2013

Thirukkannamangai Sri Bakthavathsala Perumal, Thiru Adhyayana Uthsavam‏

இத்துடன் இணைத்திருக்கும் பத்திரிகையின்படி எதிர்வரும் 01.01.2014 முதல் 10.01.2014 வரை பகல் பத்து உத்ஸவமும் 11.01.2014 முதல் 20.01.2014 வரை இராப்பத்து உத்ஸவமும் விமரிசையாக நடக்க உள்ளது.

பகல் பத்து உத்ஸவத்தில் தினசரி காலை திருமஞ்சனம், சேவாகாலம் சாற்றுமுறையும், மாலை 5 மணிக்கு உள் ப்ரகாரம் எனப்படும் இரண்டாவது ப்ரகாரத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.

9ம் உத்ஸவத்தன்று "பெரியாண்டான்" சிறப்பு எனப்படும் மூலவர் திருவடி திருமஞ்சனமும் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதலும்  நடைபெறும்.

10.01.2014 அன்று " மோஹினி அலங்காரப் புறப்பாடு" நடைபெறும்.

11.01.2014 அதிகாலை 5 மணிக்கு "(வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு)சொர்க்க வாசல்" திறப்பு நடைபெறும். சொர்க்க வாசல் திறந்து பெருமாள் "செண்பகப் ப்ரகாரம்" எனப்படும் 3 வது ப்ரகாரத்தில் பெருமாள் எழுந்தருளுவார்.

12.01.2014 - 20.01.2014 வரை தினசரி இரவு 7 மணிக்கு பெருமாள் " சொர்க்க வாசல் " வழியாக 3வது ப்ரகாரத்தில் புறப்பாடாகி எழுந்தருளுவார்.
 
20.01.2014 இராப்பத்து சாற்றுமுறை அன்று  நம்மாழ்வார் திருவடி தொழுதல் நடந்து சாற்றுமுறை ஆனதும் பெருமாள் உள் ப்ரகாரத்தி ஏளி "சொர்க்கவாசல்" சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்று உத்ஸவம் பூர்த்தி ஆகும்.
--

Dr.T.S.R.RAJAGOPALAN, (Raja),