சென்னையின் புகழுக்கு ஒரு காரணமாக விளங்குகிறது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்.
இந்தத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளார் ராமன். தனியொருவனாகத் தன்னை எப்போதும் அடையாளம் காட்டிக்கொள்ளாத இந்தப் பெருந்தகை, இக்கோயிலிலும், சீதை-லட்சுமணன் சகித மாகவே தரிசனம் தருகிறான்.
அவர்கள் மட்டுமா, சகோதரர்கள் பரதன், சத்ருக்னனுடனும் சேர்ந்து குடும்ப
சகிதமாய் காட்சியளிக்கிறான்! இப்படி சகோதரர் சகிதமாக ராமன் காட்சி
தருவதற்கு இத்தலத்தில் இன்னொரு காரணமும் இருக்குமோ என்று பெரியவர்கள்
திகைப்புடன் ஊகிப்பார்கள்.
அது என்ன காரணம்? இந்தத் திருத்தலத்தில், பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கருகே அமைந்துள்ளது ‘கோமுட்டி பங்களா’ என்று ஒரு பகுதி.
இது, அயோத்தி ராமனின் சொத்து என்கிறார்கள்! அதாவது, தனக்கு உரியதான ஒரு சொத்து தனக்கு மட்டுமல்ல, தன் ரத்த பந்தங்களுக்கும் உரியதுதான் என்று விளக்குவது போல, ராமன் தன் சகோதரர்களான பரதன், லட்சுமணன், சத்ருக்னனுடன் சேர்ந்து இங்கே குடிகொண்டிருக்கிறானோ?
அப்படித்தான் எண்ணத் தோன் றுகிறது. தனக்கில்லாவிடினும் பிறர்க்கு அளித்திடும் பெருந்தகையாளன் அல்லவா ராமன்?

Thanks to Indra Srinivasan
0 comments:
Post a Comment