Tuesday, September 3, 2013

Sri Periya Vácchán Pillai Thirunakshathiram Celebrations

 pvp-article


வியாக்கியானச்சிறப்பு

பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானச்சிறப்பு
ஆழ்வார் திருநகரி ஸ்ரீ.அழகர் இராஜகோபாலன் ஸ்வாமி
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா
  
 
எவருடைய கடாக்ஷத்திற்கு இலக்கானவர்களுக்கு ஸ்ரீதரன் எப்போதும் கிடைப்பதற்கு எளியவனோ, அத்தகையவராய், யாமுநாசார்யரின் பிள்ளையாய், ஸ்ரீமத் க்ருஷ்ணன் என்னும் பெயரையுடையவரான பெரியவாச்சான்பிள்ளையை வணங்குகிறேன்.
வைஷ்ணவ ஸம்ப்ரதாயதிற்கு தம் பரந்த உரைகளாலே மிகவும் உபகாரம் செய்தவரான பெரியவாச்சான்பிள்ளை என்னும் இப்பரம ஆச்சாரியர் ஆங்கிலம் 1167ம் வருடத்திற்குச் சேர ஸர்வஜித் வருஷ, ஆவணி க்ருஷ்ண அஷ்டமி, ரோகிணி நட்சத்திரத்தில் யாமுனாசார்யருக்கும், நாச்சியாரம்மாளுக்கும், திருவெள்ளீயங்குடி அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் சேங்கனூரில் ஸ்ரீ க்ருஷ்ணனுடைய அம்ஸமாகவேஅவதரித்தருளினார். நாலாயிர திவ்யப்ப்ரபந்தளுக்கும் வியாக்யானம் என்னும் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்ப்ரவாளம் என்னும் உயர்ந்த நடையில் உரைகள் எழுதி ‘வியாக்யானச் சக்கரவர்த்தி’ என்றும் போற்றப்படும் இவரது வைபவம் பலராலும் பரக்கப் பேசியிருக்கிற படியால் இவரது வியாக்யான பங்த்திகளில் இருந்து சில அற்புதமான பகுதிகளை சிறிது அநுபவிக்க ஒரு சிறு முயற்சி. இதில் குறைகள் இருந்தால் அவை அடியேனின் மந்த மதியே காரணம். ரஸமான அநுபவங்களுக்கு இம்மகாசார்யரின் மேதாவிசாலமும், நுண்ணறிவுமே காரணம். இவரின் பாசுர அணுகுமுறையும், நுண்பொருள் விளக்கமும், எளியநடையும் இருமொழிகளின் ஆளுமையும் அநுபவித்து அதிசயக்கத் தக்கது.
திருப்பல்லாண்டில் பகவானை பெரியாழ்வார் ’அடியோமோடும் நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு’   என்று மங்களாசாசனம் பண்ணுகிறார். ஏன் அடியோமோடும் என்று தனக்கும் பல்லாண்டு இங்கு? பகவானும் நித்யமாக பல்லாண்டு எழுந்தருளியிருக்க வேண்டும்; அது போல் அவனுக்குப் பல்லாண்டு பாட தானும் நித்யமாக இருக்க வேண்டும் என்ற பாரிப்பே ‘அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி’ என்பதற்கு தாத்பர்யம் என்பது பெரியவாச்சான்பிள்ளையின் உரை. மேலும் ’என்னோடும்’ என்னாதே ’அடியோமோடும்’ என்பதற்குக் காரணம், ஜீவாத்மா எம்பெருமானுக்கு சேஷத்வம் என்னும் ஆத்மகுணம் அறிந்தவர் பெரியாழ்வார் ஆகையாலே இவ்வாறு கூறுகிறார் என்பார் பெரியவாச்சான்பிள்ளை.

பொங்கும் பரிவு மிக்கவராகையால் பெரியாழ்வார் ‘படைபோர் புக்கு முழங்கும்’ பாஞ்சசன்யத்தின் ஒலி எம்பெருமானின் பகைவர்களுக்கு அவனைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று அஞ்சுகிறார். ஒரு தாய் தன் குழந்தைக்கு அலங்காரம் செய்து அந்த அலங்காரத்தைப் பார்த்தால் தன் கண் கூடப் பட்டுவிடுமோ என்று அஞ்சி முகம் திருப்புமா போலே, பாஞ்சசன்யமும், பகவானும் சேர்ந்திருக்கும் அழகினை பார்க்க அஞ்சி எதிரில் இருக்கும் பாஞ்சன்யத்தை ’அப்பாஞ்சசன்யம்’ என்று படர்க்கையாகக் குறிப்பிடுகிறார் என்பது பெரியவாச்சான்பிள்ளையின் வியாக்யானம்.
நாச்சியார் திருமொழியில், அநுகாரம் முற்றி இடை நடையும், இடைப் பேச்சும், முடை நாற்றமும் தன்னடையே வந்து சேர்ந்த ஆண்டாளின்   கோபிகா பாவனியில் ‘தோழியும் நானும் தொழுதோம்’ என்னுமிடத்தில் யமுனையாற்றில் நீராட வந்த பெண்களின் சேலைகளை பறித்துக் கொண்டு ஒரு குருந்த மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் கண்ணன் இந்தப் பெண்களை கைகூப்பி வணங்கச் சொல்கிறான். மானத்தை மறைக்க வேண்டியிருந்ததாலும், ஒரு கையால் வணங்குதல் கூடாது என்பதாலும், இந்த கோபிகையின் ஒரு கையையும் தோழியின் ஒரு கையையும் சேர்த்து வணங்கினாள் என்னும் பெரியவாச்சான்பிள்ளையின் உரை ரஸிக்கத்தக்கது.
’மாதலி தேர் முன்பு செல்ல’ என்னும் நாச்சியார் திருமொழிப் பாசுரத்திற்கு உரையிட்ட மகாசார்யரான பெரியவாச்சன்பிள்ளை, தேர் முன்புதானே செல்லும்; ஏன் ’மாதலி தேர் முன்பு செல்ல’ என்கிறாள் ஆண்டாள் என்று ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டு அவரே இவ்வாறு பதில் அளிக்கிறார். இந்திரனின் சாரதியான மாதலி,இந்திரன் போர் புரியும் பொழுது எல்லாம் அவன் தோற்றோடுவதனால் தேரை பின்புறம் செலுத்தியே பழகியவன். முதன் முதலில் இந்திரனால் அனுப்பப்பட்டு இராமனுக்கு இராவணனுடன் போர் புரியும் பொழுது தேர் ஓட்டிய பொழுதுதான் அவனது தேர் முன்பு சென்றது. அதனால்தான் ஆண்டாள் ’மாதலி தேர் முன்பு செல்ல’ என்று பாடியதாக இவரது வியாக்யானம்.
வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும்என்பது நாலடியார். அறம், பொருள், இன்பம் என்னும்மூன்றினுள்ளும், நடுவில் இருக்கும் பொருள் கிடைத்தால் இருபுறமும் இருக்கும் அறமும் செய்ய முடியும் இன்பமும் அனுபவிக்கலாம் என்பது பொருள். திருமங்கையாழ்வாரின் சிறியதிருமடலில்

பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே – அம் மூன்றும் 
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று 
ஆரார் இவற்றின் இடை அதனை எய்துவார் 
சீரார் இரு கலையும்  எய்துவர்  

என்று மேற்கூறிய கருத்தையே கூறுவது போல் உள்ளது. ஆனால் இந்த திருமடல் பகவானை அடையும் ஆசையில் எழுந்த பாசுரமாகையால் இந்த இடத்தில் இந்தப் பொருள் பொருந்தாது என்று பெரியவாச்சான்பிள்ளை வார்த்தைகளைச் சிறிது மாற்றி, ஆரார் இவற்றின் இடை, அதனை எய்துவார் என்று பிரித்து, அறம் பொருள் இன்பம் என்ற மூன்றினுள்ளும் இன்பம் என்னும் அதனை எய்துவார் மற்ற இரு கலையும் அதாவது அறத்தையும் பொருளையும் அடைவர் என்று பொருள் கொண்டு உரையிடுகிறார். மற்றவை இரண்டும் எவ்வாறு அடைந்ததாகக் கருதப்படும் என்பதற்கு ‘ஒருவன் இரண்டு இடங்களுக்கப்பால் உள்ள இடத்தை அடைந்தான் என்றால் அவன் மற்ற இரண்டு இடங்களையும் வழியில் கடந்துதானே வந்திருக்க வேண்டும்? எனவே மூன்றாவதாக உள்ள இன்பத்தை அடைந்து விட்டான் என்றால் மற்றவை இரண்டும் அவனால் அடையப்பட்டு விட்டது என்று பொருள் கொள்ளலாம் என்கிறார். அல்லது பகவானை ஆசையுடன் அடைந்து விட்டவனுக்கு அதுவே அறமும் பொருளும் ஆகி விடுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ க்ருஷ்ணசூரி திருவடிகளே சரணம்

A MASTER OF MANIPRAVALA LITERATURE


srImath krishNa samAhvAya namO yAmuna sUnavE
yath katAkshaika lakshyANam sulabha: srIdharas sadhA
KRISHNA SURI - A MASTER OF MANIPRAVALA LITERATURE
Madabushi Sri.U.Ve.Varadarajan Swami

It was during the post-Ramanuja period Sri Vaishnavism reached its zenith in the sphere of producing manipravala commentaries for Nalayira Divya Prabandham, Rahasya Granthas (secret works) and stotras by various Acharyas. Among those, Krishnasuri, popularly known as Periyavachchan Pillai, was first and foremost Acharya to write commentaries for all the hymns of Alwars in manipravala langauge. Manipravala means the combination of Sanskrit and Tamil words like a necklace studded with mani - pearl and pravala - coral. The admixture of coral like Sanskrit and pearl like Tamil words gives a soothing meaning with elegant beauty. This practice was prevalent, since 11th century, first in Malayalam and later applied to Tamil prose literature in Vaishnavism by Acharyas. Krishnasuri’s contribution to manipravala literature enriched the history of Tamil Language and Literature.

Krishnasuri was born to pious parents Yamuna Desika and Natchiya­ramma of Purvasikha Brahmin family in Chenganallur, a venerable place in Tanjore District, on Rohini Star in the Tamil month Avani in 1167 A.D. This day synchronizes with Sri Krishna Jayanthi, the birthday of Lord Sri Krishna. Hence he was named Krishna and later he was given the suffix Suri for his erudition. Since his childhood he was a great devotee of Lord Krishna.

It is said that he made a pilgrimage to Tirumala with his family and acquired a Divya Mangala Vigraha of Lord Venkateswara which he consecrated in his village Chenganallur. After doing service to his parents, he left his village and lived at the holy feet of Nampillai, a great commentator in Srirangam for the remaining part of his life.

During his stay in Srirangam he was amazed to hear Nampillai’s oratorial discourses on Bhagavat Vishyam and his regular attendance enabled him to win the appreciation of Nampillai and later he became the Acharya’s personal disciple like his contemporary Krishnapada, also known as Vadakkuthiruveedhi-p-pillai. Krishna­suri studied Nalayira Divya Prabandham, its meanings and other texts at the feet of Nampillai. On the order of Nampillair, he wrote a lucid commentary for Nammalvar’s Tiruvoymozhi, a nectar-like thousand hymns. Manavala Mamuni of the 15th century in his Upadesaratnanmula praises Krishnasuri as one among five commentators who was endowed with virtuous qualities in safeguarding Tiruvoymozhi through his commentary. His commentary on Tiruvoyomoszi is similar to Valmiki’s Ramayana slokas covering 24000 syllabi words. It is widely known as Irupaththu nalayirappadi. This commentary reveals his esteem and regard for Tamil. His work clears many a doubt that arise in the commentary of Nampillai, called Idu.

In the interest of creating awareness among the asthikas he wrote commentaries for other Alwars’ hymns also i.e. from Tiruppallandu to Periya Tirumadal covering 23 Prabandhams. Pillai lokam Jeer in his commentary on Upadesaratna mala narrates that though Alwars hymns are in simple Dravida Bhasha (Tamil), with divinity, melodious to hear, soft and simple in style, it is difficult to decide the inner meanings as thought of by Alwars. Such a revelation was acquired by Krishnasuri and he was able to write commentaries for the entire hymns of Alwars both for his satisfaction and for the understanding of others. His style of explaining the word by word meaning is superb. His incisive writings show his experience both in tradition and modernity of his age by adding number of similes, illustrations, grammatical points, authoritative references and so on. As an erudite scholar in Tamil Literature, his quotations from Sangam and post-Sangam literatures add lusture to the commentary. It is stated in his Prabhava Prakasika, that Lord Ranganatha of Srirangam, having heard his commentaries, gave him the title Abhayapradaraja. Even today along with Alwars hymns, his commentaries are being rendered during Adhyayana Utsavam by Areyar Swami in Srirangam.

It is to be noted that even today in Simhachalam Temple in Andhra Pradesh, Krishnasuri’s commentary for Andal’s Tiruppavai, called Muvayirappadi is being read daily, apart from recitation of Tiruppavai during Margazhi month.

Krishnasuri made significant contribution for Rahasya Granthas (secret works) relating to the development of Visistadvaita philosophy in the post Ramanuja period. He elaborately discusses the three secrets i.e. Tirumantra, Dvaya, and Charama Sloka in his outstanding work Parantharahasya.

His masterpiece Tanisloki containing thought-provoking commentary on select slokas taken from great works like Sriramayana. Mahabharatha, Varahapurana and Sri Vishnupurana will show his infinite wisdom and oasis of thoughts in the subjects.

His stupendous works of Sanskrit stotras like Yamunacharya’s Stotraratna, Chatusloki, Ramanuja’s Gandhyatmyam, and Jitante Stotram have showed his abundant reverence and respect to the earlier Acharya.

His another work Manikkamalai discusses the meaning of purushakara and Saranagathi with the basic definition of Acharya and disciple. His minor work include Sankalpa pramana tathparyam, Rahasyatraya Deepika, Rahasyatraya vivaranam, Nikamanapadi, Upaharasmriti and Kaliyan Arulappadu are enlivening the truth seekers.

His mastery over the manipravala commentaries enabled him to adorn the four chairs (thrones) of learning i.e. Prabandhams, Rahasyagranthas, Tanisloki and Stotrams and won the coveted title Vyakyana Chakravarthi (the King of Commentators).

It may not be an exaggeration that but for his tireless contribution. Sri Vaishnava manipravala literature, particularly Alwars hymns would not have got prominence and fame among the people of India and abroad.

Since the demise of his teacher Nampillair, Krishnasuri along with his contemporary Krishnapada, had administered the Ramanuja Darsana in Srirangam. His disciples were Nayanarachchan Pillai, Vadikesari Alagiya Manavala Jeer and Parakala Dasar. He attained mukti at the age of 95 in 1262 A.D.

Although seven centuries had rolled down, India is still fortunate to preserve the priceless divine treasure of commentaries left by Krishnasuri, because of the contribution made by Kanchi Prathivadhi Bhayankaram Annagaraya­charya Swami during the first half and this century and later by Sri Vaisanava Sudarsanam, Tiruchi a private organi­sation, which made: concerted efforts in reproducing and reprinting Krishnasuri’s commentaries, a magnum opus for Sri Vaishnavas.



Please login to vedics Foundation website to listen to the upanyasams


Tamil Upanyasams: 

  • Sri Periya Vácchán PillaiVaibhavam by Velukkudi Sri. U. Ve. Krishnan swami interluded with three  kIrtans by Kidambi Anuvratha Narasimhan
  • Sri Periya Vácchán Pillai Vyákhyána Cháturyam by Smt. Sundaravalli ammangAr
  • Sri Periya Vácchán Pillai Urai Nayam by Srivaishnavasri Sri. U. Ve. Krishnamachariar swami
  • Sarvathonmukha Pándithyam of Swami Periya Vácchán Pillai by Sri. U. Ve. Varadarajan Swami of Kinchitkaram Patasala, SriRangam
  • Swami Periya Vácchán Pillai Samskrita Právañyamum Tamizh Rásikyamum by Sr. U. Ve. Srivilliputhur Kannan Swami
  • Musalakisalayam --An inspirational story in Tamil  by a kid -- Kumaari Hiranmayi

 Telugu Upanyasams:


  • PeriyavAchAn piLLai Vaibhavamu by  Dr. Madabushi Sri  U. Ve. Varadarajan Swami
  • VyAkhyAna Seili by Madabushi Dr. Madabushi Sri  U. Ve. Varadarajan Swami
Credits to

150px banner3

0 comments:

Post a Comment