Monday, December 31, 2012

திருப்பாவை - 16

திருப்பாவை - 16 பாவயர்கள் நந்த கோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க வேண்டுதல் மோஹன ராகம், ஆதி தாளம் நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். சென்ற பாடல் வரை, தூங்கிக்கொண்டிருந்த கோபியரையெழுப்பிய...

Sunday, December 30, 2012

திருப்பாவை - 15

திருப்பாவை - 15 எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா! பேகடா ராகம், மிச்ரசாபு தாளம் எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்; ‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’ ‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’ ‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’ ‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’ வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்....

Lakshmi Narasimha Swamy Temple Akki Hebbalu, Mandya district Karnataka

Exclusive video from Sankara TV Akkihebbalu is a village in the southern state of Karnataka. It is located in the Krishnarajpet taluk of Mandya district in Karnataka. Famous for 800 years old Lakshmi Narasimha Swamy temple constructed by Goutama Maharshi. Famous Rathotsava will be celebrated every year during the time of Feb. There are frequent passenger/express trains from Mysore to Akkihebbalu or you can get down at Hosa agrahara and...

Saturday, December 29, 2012

திருப்பாவை - 14

திருப்பாவை - 14 எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது தூங்குதல் முறையோ? ஆனந்தபைரவி ராகம், மிச்சராபு தாளம் உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்; எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்....

Friday, December 28, 2012

திருப்பாவை - 13

திருப்பாவை - 13 படுத்துறங்குவதை விட்டு எழுந்து வா! அடாணா ராகம் , மிச்ரசாபு தாளம் புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய், பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்; வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று; புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பறவையாய் வந்த பகாசுரனின் வாயைப்பிளந்தவனும் கொடிய...

Thursday, December 27, 2012

திருப்பாவை - 12

திருப்பாவை - 12 விடியர்க்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?கேதார கெளள ராகம் , ஆதிதாளம்கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்றமனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?அனைத்தில்லத் தாரும்...

Wednesday, December 26, 2012

திருப்பாவை - 11

திருப்பாவை - 11 அசையாமல் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?ராகம்: உசேனி, மிச்ரசாபு தாளம்கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துசெற்றார் திறலழியக் சென்று செருச் செய்யும்குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற் கொடியே!புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்,சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீஎற்றுக்கு உறங்கும் பொருள்?-- ஏலோர் எம்பாவாய்//இளம் கன்றுகளை ஈன்ற பசுக்களை கறப்பவர்களும்பகைவர்களை...

Tuesday, December 25, 2012

Hanuman Jayanthi purappadu, Bangalore, December 2012

Today 25th December 2012 Hanuman Jayanthi was celebrated in Bangalore. Enjoy the photos from purappadu. ...

திருப்பாவை - 10

திருப்பாவை - 10 பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற! தோடி ராகம் , ஆதிதாளம் நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய். //நோன்பு நேற்றுச் சுகம் அனுபவிப்பவளே! வாசல் கதவை திறக்காதவர்கள்...

திருப்பாவை - 9

திருப்பாவை - 9 மாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப்பாடுவோம்! ஹமீர்கல்யாணி ராகம் , ஆதிதாளம் தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? ‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய வாசனைப்புகை...

Monday, December 24, 2012

நம்பெருமாள்

...

Sunday, December 23, 2012

Tiruppavai pasuram from tiruppavai malai book

...

திருப்பாவை - 8

திருப்பாவை - 8  கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி ராகம் : தன்யாசி, மிச்ரசாபு தாளம் கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு மாவாய் பிளநதானை மல்லரைமாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்! கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது எருமைகள்...

Saturday, December 22, 2012

திருப்பாவை - 7

திருப்பாவை - 7 பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ? பைரவி ராகம , மிச்ரசாபு தாளம் கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ? தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.\\...

Friday, December 21, 2012

திருப்பாவை - 6

திருப்பாவை - 6 பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல் சங்கராபரணம் ராகம், மிச்ரசாபு தாளம் புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.\\ பறவைகள் கூவிவிட்டன. கருடனை...

Thursday, December 20, 2012

திருப்பாவை - 5

திருப்பாவை - 5 கண்ணனை வாழ்த்தும் முறையும், அடையும் பலன்களும் ஸ்ரீ ராகம் , ஆதிதாளம் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை, தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய். \\ மாயச் செயலுடைய கண்ணன், வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை தூய யமுனை நதிக்...

Wednesday, December 19, 2012

திருப்பாவை - 4

திருப்பாவை - 4 மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம் வராளி ராகம் , ஆதிதாளம் ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். \\ வருணதேவனே! சிறுதும் ஒளிக்காமல் கடலில் புகுந்து நீரைமொண்டு இடி இடித்து ஆகாயத்தில்...

Tuesday, December 18, 2012

திருப்பாவை - 3

திருப்பாவை - 3 உத்தமனைப்பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வம்ஆரபி ராகம், ஆதிதாளம்ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்பூங்குவளைப்பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.//மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த...

Monday, December 17, 2012

திருப்பாவை - 2

திருப்பாவை - 2 நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள் வஸந்த ராகம், ஆதிதாளம் வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய். பூமியில்...

திருப்பாவை - 1

திருப்பாவை - 1  நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியர்காலை நீராட அழைத்தல் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.(*) மார்கழி மாதம்...