Thursday, January 2, 2014

Namperumal - Adhyayana utsavam Pagal pathu Day 2


திரு அத்யயன உற்சவத்தின் இரண்டாம் நாளன(2/1/14) இன்று ரெங்கராஜன் ஆன நம்பெருமாள் ராஜா சௌரி கொண்டையும் கலிக துறாய், சந்திர சூர்யா பிரபை சாற்றி வைர அபய ஹஸ்தத்துடனும் வைர பதக்கமும் பர் பல அடுக்கு திருவாபரணமும் சாற்றி கொண்டு ஆண்டாள் பாடியது போல் பச்சை பசும் தேவர் என்பதற்கு இணங்க பச்சை பட்டுடுத்தி பல்கலனும் அணிந்து ஆறாத அருளமுதம் தரும் பெருமானை காட்சி தருகின்றார்

by
Sudarsan Rao Bhoware 


 Thanks to photo by Sundar bhattar

வைகுண்ட ஏகாதசி- பகல் பத்து - 2ம் திருநாள்

இன்று பகல்பத்து இரண்டாம் திருநாள். அரங்கன் கொண்டாடும் திருவிழாக்களில் மிகவும் அகண்ட திருவிழா இது ஒன்றுதான். 21 நாட்கள்....! இந்த 21 நாட்களும் தீந்தமிழ் ஆழ்வார் பாசுரங்கள்தாம்..! அரையர்கள் கொண்டாட்டம்தான்...! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாகிய, அரங்கனின் கல்யாண குணங்களை அரையர்கள், படியேற்ற ஸேவையின் போது, கட்டியம் கூறி அறைகூவும் போது நம் மெய்சிலிர்க்கும்..!

“அரையர்“ என்றால் “அரசன்“ என்று பொருள். இயல், இசை,
நாட்டியம் என்ற முக்கலைகளிலும் இவர்கள் ஈடு இணையற்று விளங்குதலால் இவர்களுக்கு இந்த பெயர் வர காரணமாயிற்று.

இவர்கள் ஸ்ரீமந் நாதமுனிகளின் வம்ச பரம்பரையினர்கள் ஆதலால் இவர்கள் ஆசார்யர்களாகும் தகுதியும் பெற்றவர்களாவார்கள். வைணவத்தின் தலைச்சிறந்த ஆசார்யர் ஸ்வாமி இராமனுஜர் ஆவார். இவருக்கு ஒரு ஆசார்யராகயிருந்தவர் திருவரங்கப்பெருமாள் அரையர் ஆவார். அதுபோன்று நஞ்சீயருக்கு, பிள்ளை திருநறையூர் அரையர் ஆசார்யராக இருந்துள்ளார்.

அரையர் கலையினை செம்மையாக வளர்த்தவர்கள், ஸ்ரீமந் நாதமுனிகள், ஆளவந்தார், எம்பெருமானார், எம்பார் ஆகியவர் ஆவார்.

உடையவர் தம் ஆசார்யனான திருவரங்கப்பெருமாள் அரையருக்கு, எண்ணை தேய்த்து விட்டு, வெந்நீர் வைத்து, நீராட்டி, பணிவிடை பல செய்துள்ளதை குரு பரம்பரைச் செய்திகள் மூலமாக நாம் அறியலாம்.

அரையர்கள் இதுநாள் அரங்கனுக்காக செய்து வரும் இந்த கைங்கர்யத்தினை வேறெங்கும் செய்வதில்லை.

நம்பிள்ளையின் ஈடு அரையர்கள் பற்றிய அரிய செய்திகள் பல தெரிவிக்கின்றது. அரையர் வடமொழியிலும், தமிழிலும் நல்ல புலமைப் பெற்று ஆழ்வார் பாசுரங்களுக்கு, நன்கு வியாக்கியானம் செய்துள்ளனர்.

நம்பெருமாள் இருமுறை ஸ்ரீரங்கத்தினை விட்டு வெளியே இருந்திருக்கின்றார். கி்பி 10 ம் நுாற்றாண்டுக்கு முன் ஒரு முறை முகமதியர்களால் டெல்லி வரை சென்றிருக்கின்றார். அப்போது அரையர்கள்தாம் டெல்லி சென்று, அரங்கனைப் பெறுவதற்காக, எதற்காக தம் கலையினை அரங்கனைத் தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்தியறியாத அவர்கள், அந்த டெல்லி பாதுஷா முன்பு “ஜக்கினி“ என்னும் பரதத்தினை, ஆடிப்பாடி அவனை குளிர்வித்து அரங்கனை மீட்டு வந்திருக்கின்றனர். மற்றொருமுறை அரங்கன் கி.பி1324 பிள்ளைலோகாச்சார்யார் அவர்களால் ஜ்யோதிஷ்குடிக்கு எழுந்தருளியிருக்கின்றார்.

இவர்களுக்கு, அரங்கனின் திருமுற்றம் முன்பு, “திருவாய் முழக்கம்” மற்றும் “திருவாய்மொழி விண்ணப்பம் செய்வார்” என்று அருளப்பாடிட்டு அழைப்பர். “இசைக்காரர்“ என்றும் இராமனுஜர் அழைத்துள்ளார்.

ஒரு காலத்தில் ஸ்ரீரங்கத்தில் கீழை உத்திர வீதி முழுவதுமே் அரையர்கள் கூட்டத்தினால் நிரம்பியிருந்தது. அவ்வீதியே “பாடுவான் வீதி“ என்று அழைக்கப்பெற்றது.

அரையர்கள் ஸேவை என்பது தற்சமயம் தமிழகத்தில், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்துார், ஆழ்வார் திருநகரி ஆகிய ஊர்களில் மட்டிலுமே உள்ளது. ஸ்ரீரங்கத்தில் அரங்கனது திருவருளால் செம்மையாக நடந்து வருகின்றது.

இவர்கள் மேன்மேலும் திடகாத்திரமாகவும், செம்மையாகவும் அரங்கனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு இத்திருநாளில் விசேஷமாக அரங்கனிடத்து பிரார்த்திப்போம்..!


by 
murali bhattar

0 comments:

Post a Comment