Saturday, January 11, 2014

வைகுண்ட ஏகாதசி திருநாள் நம்பெருமாள் ரத்னாங்கி சேவை

வைகுண்ட ஏகாதசி திருநாள் நம்பெருமாள் ரத்னாங்கி சாற்றி கொள்கின்றார்
ஏன் இந்த ரத்னாங்கி சேவை ????/ விடை இங்கே ஒரு ஜீவன் உடலை பிரிந்த பின் அர்ச்சிராதி மார்க்கமாய் வைகுண்ட லோகம் சென்று விரஜை நதியில் நீராடி வைகுண்டம் புகும் பொழுது ஒழி மிகுந்த உடலயும் நான்கு கரங்களும் கஸ்துரி திருமான் காப்பு நமக்கு வழங்குவார்கள் அதை நம்பெருமாள் இன்று நடித்து காட்ட ஒளி மிகுந்த உடம்பை ரத்னாங்கி என்னும் ஒளி மிகுந்த கவசம் சாற்றி சேவை சாதிகின்றார்

 by Sudarsan Rao Bhoware



  

Photos by Rengarajan Ravi


வைகுண்ட ஏகாதசி - இராபத்து - 1ம் திருநாள் (11.01.2014) இரத்னங்கியுடன் அகிலலோக ராஜன், ரங்கராஜன் கோலகலமாக காட்சி தருகிறார். ஒரு முக்தியடைந்த ஆத்மா, விரஜா நதி எனும் பரமபதத்திற்கு முன்னே வரும் ஆற்றை கடந்ததும், அது தன் சரீர வாஸனையினை மறந்து, தேஜோமயமான திவ்யமான ஒளி பெற்ற சரீரம் பெற்று, தேவர்கள் எதிர் கொண்டழைத்து பரமபதத்தினை நோக்கி பயணிக்குமாம். இந்த நிகழ்வினை, தாமே முன்னின்று இந்த திருநாள் தொடங்கி பத்து நாட்களும், அரங்கனே நடித்துக் காட்டுகின்றான். விரஜாநதி மண்டபம் வரை போர்வை சாற்றி வரும் அரங்கன், பரமபதவாசல் கடக்கும் முன் தம் போர்வையினை களைந்து, புது மாலைகள் சாற்றிக் கொண்டு, தேஜோமயமாக காட்சியருளுவான். இது அரங்கனது அளவற்ற சௌலப்யம். இந்த திருநாளில் அவனது அன்பு அளவுகடந்த பொங்கும் - காரணம் - ஆழ்வார்களின் அண்மை, அவர்களது அன்பான பாசுரங்கள், அரையர்களது கொண்டாட்டம், அர்ச்சகர்களது அலங்காரம் எல்லாவற்றினையும் விட கடலலை போன்ற அவனது பக்தர்களின் வருகை, அன்பு..! சொல்லிக்கொண்டே போகலாம்...! இந்த திருநாள் முழுக்கவே ஆழ்வார்கள், ஆசார்யர்களோடு அரங்கனது தர்பார்தான்..! வைகுண்ட வாசலை கடக்கும் முன் இரண்டு பல்லிகளை மேலே நாம் தரிசிக்கலாம். இரண்டு முனிகுமாரர்கள் பகவானது பிரஸாதம் தயாரிக்கையில் கவனமின்றி செயல்பட்டதால் பல்லிகளாக மாற சாபம் பெற்று மீண்டும் சாபவிமோசனம் அடைந்ததாக புராண வரலாறு. ஆனால் தத்வார்த்தமாக சிந்திக்கையில், பல்லிகள் எப்படி புவிஈர்ப்பு சக்தியினையும் மீறி மேலே ஒரு பிடிப்புடன் நிற்கின்றனவோ, அதே போன்று நாம் இந்த லோகாதயமான ஆசைகளில் அகப்பட்டுக்கொள்ளாமல், பரமபதத்திலுள்ள அந்த பரமன் மீது பற்று கொண்டு, ஒரு தவமாகவே வாழ்தோமானால், வைகுண்ட வாசல் நமக்காக திறந்தேயிருக்கும் என்பதனை உணர்த்துவதை உணரலாம். திருவரங்கத்தில் வாழ்ந்த, பல ஆசார்யர்கள் அரங்கனாலேயே அவனது அரண்மனையான பரமபதத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதை நாம் குரு பரம்பரையில் காணலாம். - தாஸன் - முரளீ பட்டர்-

0 comments:

Post a Comment