Monday, April 21, 2014

Thirukkoshtiyur Panguni Uthiram photos

Thirukkoshtiyur Punguniuttiram Perumal Sethi Purapadu and Ujnjal Sevai  Photos

Thanks to Thirukkoshtiyur Vembu swami for the photos.





Wednesday, April 9, 2014

Gandhalankaram for Sri Kodandarama Swamy, Bannur, Karnataka






Thanks to Vasudevan Chakravarthy for sharing the photos.

" ஸ்ரீ ராமநவமி" உத்ஸவம், திருக்கண்ணமங்கை

திருக்கண்ணமங்கை, ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலின் வடவண்டை ப்ரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சீதாதேவி, லக்ஷமண, ஹனுமத் ஸமேத ஸ்ரீ கோதண்டராமர் " ஸ்ரீ ராமநவமி" உத்ஸவம். திருவீதிப்புறப்பாடு. 08.04.2014 செவ்வாய் கிழமை.

Thanks to TSR Rajagopalan for sharing the photos.





















Monday, April 7, 2014

Kosalendraya , mahaneeya gunabhdhaye



Kosalendraya , mahaneeya gunabhdhaye,

Chakravarthi thanujaaya sarva bhoumaya Mangalam.

Vedavedantha vedhyaya , Megha Shyamala moorthaye,
Pumsaam mohana roopaya , punyaslokaya Mangalam.

Viswamithrantharangaya , mithila nagari pathe,
Bhagyaanaam paripakaya , bhavya roopaya Mangalam.

Pithru bhakthaya sathatham brathrubhi saha seethaya,
Nandithakhila lokaya , Ramabhadraya Mangalam.

Thyaktha saketha vasaya , chithra koota viharine,
Sevyaya sarva yaminaam , dheerodhayaya Mangalam.

Soumithrina cha janakya chapa banasi dharine,
Samsevyaya sada bhakthya , swamine mama Mangalam.

Danda karanya vasaya , khara dhooshana sathrave,
Grudhra rajaya Bhakthaya , mukthi dayasthu Mangalam.

Sadaram Sabari datha phala moola abhilashine,
Soulabhya paripoornaa, sathvodrikthaya Mangalam,

Hanumath sama vethaya , harresabheeshta dhayine,
Bali pramadhanayasthu , Maha dheeraya Mangalam.

Srimathe Raghu veeraya , sethullangitha sindhave,
Jitha rakshasa Rajaya , Rana dheeraya Mangalam.

Vibheeshana kruthe preethya , lankabheeshta pradhayine,
Sarva loka saranyaya , Sri Raghavaya Mangalam.

Asadhya nagarem divyamabhishikthaya Seethaya,
Rajadhi rajaya Rama Bhadraya Mangalam.

Brahmadhi deva sevyaya , brahmanyaya mahathmane,
Janaki prana nadhaya , Ragu nadhaya Mangalam.

Sri soumya jamathru mune krupaya smanu peyushe,
Mahathe mama nadhaya , Raghu nadhya Mangalam.

Mangala sasana paraiir madacharya purogamai,
Saescha poorvairacharyai , sathkruthayasthu Mangalam

Ramya jamathru muneena , mangala sasanam krutham,
Trilokyadhipathi Sriman , karothu Mangalam sada.
Ithi Sri vara vara muni swami krutha , sri rama mangala sasanam sampoornam

English Translation

Let good happen to Rama ,
Who is the king of Kosala,
And the ocean of good qualities
Let good happen to Rama,
Who is son of emperor Dasaratha,
And who is a very great king.

Let good happen to Rama,
Who is venerated by Vedas and Vedanta,
Who is of the black colour of the rich cloud,
Who is one of the prettiest among men,
And who has a fame which is pure.

Let good happen to Rama,
Who is a confidant of Viswamithra,
Who is the matured luck of ,
The king of Mithila and ,
Is the form of pure humility.

Let good happen to Ramabhadra,
Who is a devotee of his father,
Who shines with Sita and his brothers,
And who makes the entire world happy.

Let good happen to Lord Rama,
Who is courageous and kind,
Who left the city of Ayodhya,
And lived in the forest of Chithrakoota,
And who served all great sages.

Let good happen to my Lord Rama,
Who was with Lakshmana and Sita,
Who was armed with sword and bow,
And who is always served by devotees.

Let good happen to the giver of salvation,
Who lived in the forest of Danda karanya,
Who was the enemy of Asuras, Khara and Dhooshana,
And who was greatly devoted to Jatayu , the king of birds.

Let good happen to him who has lot of good qualities
Who liked the fruits and roots offered by Shabhari.
And can be fully realized, extremely easily.

Let good happen to the God who is very brave,
Who can be easily be attained by Hanuman,
Who used to fulfill desires of King Sugreeva,
And who wounded and killed the great Bali.

Let good happen to the God who is brave in battle,
Who is the valorous hero of the clan of Raghu,
Who built the bridge over the sea,
And who won over the king of Rakshasas.

Let good happen to Lord Raghava,
Who presented with happiness Lanka,
To Vibheeshana due to his love,
And who has the entire world as devotees.

Let good happen to Lord Raghava,
Who was crowned along with Sia,
When he returned back to the city of Ayodhya,
And who is the king of all kings.

Let good happen to the Lord of the Raghu clan,
Who is served by Lord Brahma and other devas,
Who protected Vedas and Brahmins,
And who was the king of the soul of Janaki.

Let good happen to the Lord of the Raghu clan,
Who was got to us by the grace of the saint Jamathru,
Who is my Lord who is on of the greatest.

Let good happen to the Lord who only did good,
The salutary song about him is greatest by my teacher,
Grater than all that is written by previous great teachers

This song praying for good to the lord,
Written by the handsome sage Jamatha,
Wishes for all good all times,
To Lord Rama who is the king of three worlds.

Thus ends the song of good for Lord Rama, written by the sage Vara vara muni

By
Jamatha muni
Translated by

P.R,Ramachander

திருவல்லிக்கேணி





சென்னையின் புகழுக்கு ஒரு காரணமாக விளங்குகிறது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்.
இந்தத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளார் ராமன். தனியொருவனாகத் தன்னை எப்போதும் அடையாளம் காட்டிக்கொள்ளாத இந்தப் பெருந்தகை, இக்கோயிலிலும், சீதை-லட்சுமணன் சகித மாகவே தரிசனம் தருகிறான்.
அவர்கள் மட்டுமா, சகோதரர்கள் பரதன், சத்ருக்னனுடனும் சேர்ந்து குடும்ப சகிதமாய் காட்சியளிக்கிறான்! இப்படி சகோதரர் சகிதமாக ராமன் காட்சி தருவதற்கு இத்தலத்தில் இன்னொரு காரணமும் இருக்குமோ என்று பெரியவர்கள் திகைப்புடன் ஊகிப்பார்கள்.
அது என்ன காரணம்? இந்தத் திருத்தலத்தில், பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கருகே அமைந்துள்ளது ‘கோமுட்டி பங்களா’ என்று ஒரு பகுதி.
இது, அயோத்தி ராமனின் சொத்து என்கிறார்கள்! அதாவது, தனக்கு உரியதான ஒரு சொத்து தனக்கு மட்டுமல்ல, தன் ரத்த பந்தங்களுக்கும் உரியதுதான் என்று விளக்குவது போல, ராமன் தன் சகோதரர்களான பரதன், லட்சுமணன், சத்ருக்னனுடன் சேர்ந்து இங்கே குடிகொண்டிருக்கிறானோ?
அப்படித்தான் எண்ணத் தோன் றுகிறது. தனக்கில்லாவிடினும் பிறர்க்கு அளித்திடும் பெருந்தகையாளன் அல்லவா ராமன்?

Thanks to Indra Srinivasan

Sunday, April 6, 2014

நல்படிப்பினை நல்கும் பங்குனித் திருநாள்


நல்படிப்பினை நல்கும் பங்குனித் திருநாள்
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
”இன்றைக்கு நாம் எழுந்தருளின இடத்திலே திருக்காப்பு சேர்த்துக்கொண்டு, திருமுக மண்டலத்தைத் திருப்பிக்கொண்டு, திருச்சேவடிமார்கள் கைகளாலே பந்துக்களாலும், பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களையெல்லம் இப்படி பண்ணவந்த கார்யம் எது…..?”
எல்லாரையும் “அஞ்சேல்” என்று தம் காக்கும் கரம் காட்டி அபயமளித்து, அபேக்ஷிக்கும் அரங்கனே புலம்பி தவிக்கின்றானே..? சக்ரவர்த்திக்கெல்லாம் சக்ரவர்த்தியான சக்ரவர்த்தி திருமகனால் ஆராதிக்கப்பட்டவரும், எல்லா திவ்யதேச எம்பெருமான்களுக்கும் இராஜாவானவரும், ஆழ்வார்கள் அனைவராலும் அபிமானிக்கப் பெற்றவரான ரங்கராஜாவன்றோ இவ்வாறு சோகித்து புலம்புகின்றார். அதுவும் கருணா நாயகியான ரங்கநாயகி ஸந்நிதி வாசலின் முன் நின்று இப்படி அவமானப்படுகின்றாரே…! தாயாரின் இந்த கோபத்திற்கு காரணம்…?
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் வந்தடைய, தர்மவர்மா எனும் ஒரு சோழ மாமன்னின் கடும் தவமும் ஒரு காரணமாயிருந்தது. இந்த மன்னனின் குலக்கொழுந்து கமலவல்லி நாச்சியார். பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தவள். இவள் அரங்கனிடத்து அன்பு மிக கொண்டு கலந்தவள். இந்த தாயாரை பிறந்த நாளன்று அனுக்ரஹம் செய்வதற்கு அவள் பிறந்த உறையூருக்கேச் சென்று, தாயாருடன் சேர்த்தி கண்டருளியதை, ஸ்ரீரங்கநாச்சியாரின் அந்தரங்க தாதியர் ஒருவர் தாயாரிடம் போட்டு கொடுக்க “பிரணய கலகம்“ என்னும் “தெய்வீக ஊடல்“ அமர்க்களப்பட்டு கொண்டிருக்கின்றது. அரஙகன் அவமானத்திற்கு மேல் அவமானப்பட்டு கொண்டிருக்கின்றான்.

உறையூருக்குப் பெருமாள் எழுந்தருள இன்னொரு மிக முக்கியமான காரணமும் உண்டு. அது, அனுதினமும் தன்னை காவிரிக்கரையில் துதித்து, அழுது, தொழுது, உருகிய திருப்பாணாழ்வார் ( உறையூர் – திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலம்.) அவதரித்த கழனிதன்னில், தம் திருப்பாதங்களையிட்டு தாம் ஆனந்தபடுவதற்காகவும், திருப்பாணாழ்வாருக்கு ஒரு ஏற்றம் தருவதற்காகவும், அன்பு மேலிட்டு எழுந்தருளப்போக, அவதியாய் அமைந்துவிட்டது..! பாவம்…!
இந்த உற்சவம் முழுவதுமே, அரங்கன் தம் பக்தர்கள் அனைவரையும் ஆட்கொள்ளவும், அன்பு கொள்ளவும், அங்குமிங்கும் அலைந்துஈ ஆட்பார்த்துயுழி தரும் அற்புதமான உற்சவம். நம்பெருமாளுக்கு, ஜீயர்புரம், எல்லைக்கரை மண்டபம், இரட்டை மண்டபம் என எப்போதும் அலைச்சல்தான்..!
ஆனால்…! பெரியபிராட்டிக்கு சந்தேகம்..! அரங்கனுக்கு திண்டாட்டம்..!
இவர்களின் ஊடலைத் தீர்த்து வைக்க, இந்த இரண்டு பேர்களாலும் மதிக்கப்பெறும் ஒருவர் வேண்டுமே..? யார் அவர்..? நம்மாழ்வாரைத் தவிர வேறு யாரால் இந்த சிக்கலைத் தீர்க்கமுடியும்?
நம்மாழ்வார் எழுந்தருளி சமாதானம் செய்து வைக்க ஊடல் முடிந்து கூடல் எனப்பெறும் “தெய்வீக சேர்த்தி“யானது, இந்த மண்ணுலகு உய்ய, மண்ணுலகிலுள்ள மனிசர்கள் உய்ய ஆரம்பமாகின்றது..!

ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம்மானது பிரணயகலகம் எனப்படும் உற்சவத்தினைக் கொண்டாடுமாறு சொல்கின்றது. நம்பெருமாள், பங்குனி ஆறாம் திருநாளன்று உறையூர் எழுந்தருளியது ஒரு நல்ல காரணமாக அமைய, உற்சவம் அழகுபட பிரணயகலகத்துடன் அமைக்கப்பெற்றது.

இந்த பிரணயகலகமானது, ஜீவாத்மா – பரமாத்மா இடையில் நடக்கும் போராட்டத்தின் ஒரு சூக்கும்மான வெளிப்பாடு. தாயார் ஜீவாத்மாவிற்காக அதீத கருணைக்காட்டும் அற்புதமான அன்பு கொண்டவள். குற்றமே செய்தொழியும் சேதனர்களின் குற்றம் ஒதுக்கி, சிறு நல்குணம் இருந்தாலும், அதனை பெரிதுபடுத்தி, மிக்கத் தாயன்போடு, எம்பெருமானிடத்தில் தாம் உஜ்ஜீவிக்க சிபார்சு செய்பவள். பகைவனுக்கும் அருளும் பண்புள்ளவள்.
இராவணன் சீதையினை அடைய விரும்பினான். அந்த கணமே சீதாப்பிராட்டி தம் கற்பெனும் தீயினால் இராவணனைக் கொன்றிருக்க முடியும்…! ஆயினும் இராவணனிடத்தில் “மனோ நிவிர்த்தய” என்று சூசகமாக அறிவுறுத்துகின்றாள். மனநிலையை திருப்பச் சொல்கின்றாள். அதாவது “மன“ என்னும் வார்த்தையினை திருப்பிப்படித்தால் “நம“ (வணங்கு) எனும் பொருள் வரும். பிராட்டியாரின் அறிவுரையினை ஏற்காத இராவணன் வீழ்ந்தான். சரணடைந்த வீபிடணன் பேறு பெற்றான்.
ஸ்ரீபராசரபட்டர், பெரியபிராட்டியினை தரிசிக்கின்றார். தாயார் வெட்கப்படுவதை போன்று அவர் மனதில் படுகின்றது. பிராட்டியார் தனிக்கோவிலிலன்றோ வீற்றிருக்கின்றாள்..! வெட்கப்பட வேண்டியதில்லையே..! சிந்திக்கின்றார்..! சொல்கின்றார்..”தன்னிடம் சரணாகதியடைந்தவர்களுக்கு, தாம் கொடுக்கு ஐஸ்வர்யம் போதாது. மேலும் கொடுக்க வழியில்லையே..” என்று எண்ணியெண்ணி நாணுகின்றாளோ…!”. ரசனைபட வர்ணிக்கின்றார்.
பிராட்டியாரோடு சேர்ந்த பரந்தாமன்தான் பரம்பொருள். எப்போதுமே தம் திருமார்பினை விட்டு அகலாத தாயாருடனே இருந்தால் கூட, இந்த ஒரு நாள் மட்டும் நிதர்சனமாக அருகருகே நெருக்கமாய் அமர்ந்து, ஆண்டிற்கொருமுறை, அருள்பாலிப்பது அற்புதமான ஒரு நிகழ்வு. இந்த நாள் ஒரு இனிய நாள்..! பரிவு பொங்கும் பெருநாள்..! கற்பகத்தரு போன்று வேண்டியது நல்கும் நன்னாள்..!
இதனை நன்கறிநதவர் உடையவர். இந்நாளில்தான் அவர்தாம் இயற்றிய, ஸ்ரீரங்க்கத்யம், வைகுண்டகத்யம், சரணாகதி கத்யம் ஆகிய ஒப்பற்ற மூன்று இரத்தின பாமாலைகளை திவ்யதம்பதிகளின் திருவடிகளில் சமர்ப்பித்து, திருப்பாதங்கள் சரணடைந்து, தமக்கு பரமபதம் பிரார்த்தித்து, கிடைக்கப்பெற்றார்.
இந்த உற்சவமானது, பெரிய பெருமாளின் அவதார நட்சத்திரமான ரோஹிணியில் தொடங்குகின்றது. கமலவல்லித் தாயாரின் அவதார நட்சத்திரமான பங்குனி ஆயில்யம் (6ம் திருநாள்) அவருடன் சேர்த்தி கண்டருளி அனுக்ரஹித்தும், பெரியபிராட்டியார் அவதரித்த உத்திரம் நட்சத்திரத்தன்று (9ம் திருநாள்) பெரியபிராட்டியாரோடு சேர்த்தி கண்டருளியும், தம்மை தரிசிப்பவர்களுக்கெல்லாம், அதீத வாஞ்சையுடனும், அன்பு மிகுந்து அருள்பாலிக்கும், வேண்டிய வரமெல்லாம் நல்கும், ஒரு கருணைமிக்க உற்சவம்.
இந்த திருநாளின்போது, திவ்யதம்பதிகள் சூக்கும்மாக நமக்கு சில விஷயங்களைத் தெளிவுப்படுத்துகின்றனர். இது இன்றளவும் நமக்கு ஏற்புடைதயதாகயுள்ளது. இதனை நாமறிந்து வாழ்வோமானால் என்றும் நன்மையுண்டு. அவையாவன.
என்னதான் கருத்து வேறுபாடுகள் கணவன், மனைவிக்குள் ஏற்பட்டாலும், யாரேனும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, பொறுமையுடன் மீண்டும் இணைதல் வேண்டும். பிரிவு ஒன்றே தீர்வு எனக் கருதவேண்டாம். முடிந்தவரை பொறுமை காட்ட வேண்டும்.
சான்றோர்கள் அறிவுரையை ஏற்க வேண்டும். இதனை நம்மாழ்வாரின் அறிவுரையினைத் தாயார் ஏற்று, நம்பெருமாளுடன் சேர்த்தி கண்டருளுவதின் மூலம் நமக்கெல்லாம் உணர்த்துகின்றார்.
அனைவரிடத்திலும் அன்பாகயிருக்கவேண்டும். எப்போதும் குற்றமேக் காணக்கூடாது. கோபித்தல் கூடாது.
திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே..!
பங்குனியில் உத்திரநாள் பாருதித்தாள் வாழியே..!

“பழய சோறும், மாவடுவும்“ (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)


“பழய சோறும், மாவடுவும்“
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)

நம்பெருமாள் ஜீயர்புரம் எழுந்தருளுதல்



மற்ற எல்லா உற்சவங்களைக் காட்டிலும் இந்த உற்சவத்தில் நம்பெருமாளுக்கு அலைச்சல் மிகவே அதிகம். அன்பு பெருக்கு வெள்ளமாய் வழிகையில் அலைச்சல் அதிகமாகத்தானேயிருக்கும்!



இன்றைய திருநாள் சுவாரசியமான பிண்ணனி கொண்டது. எம்பெருமானார் காலத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்வாகயிருந்திருக்கலாம்.



அரங்கன் மீது ஆராத காதல் கொண்ட வயதான பாட்டி மற்றும் அவளது பேரன்.

பேரனின் திருநாமம் “ரங்கன்“. ஜீயர்புரம் என்னும் ஒரு சிறு கிராமம். காவிரிக்கரை ஓட்டி அமைந்துள்ள ஒரு அழகான இடம். அந்நாளில் என்றும் காவிரி வற்றாது ஓடிக் கொண்டிருந்த ஒரு காலம்.



பேரன் “சவரம் செய்துகொண்டு திரும்பி வந்துவிடுகிறேன்“ என்று பாட்டியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். சவரம் செய்து கொண்டு காவிரியில் குளிக்க இறங்கியவனைக் காவிரி அள்ளிக் கொண்டு புரண்டோடினாள். அரங்கனது கடாக்ஷத்தினால் அவன் மீது மாறாத பக்திக் கொண்ட பேரனை ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபத்தின் அருகே கரை சேர்த்தாள் காவிரித்தாய்!.



நன்றி பெருக்குடன் நெக்குருக அரங்கனைத் தரிசித்தான் பேரன். பாட்டி தவிப்பாள் என்ற நினைவு வந்து அரங்கனிடத்து அவளுக்கும் சேர்த்து பிரார்த்திக்கின்றான்.



இங்கு ஜீயர்புரத்தின் காவிரிக்கரையில் பாட்டி பேரனைக் காணாமல் “ரங்கா..! ரங்கா..!“ என கதறிக் கொண்டிருக்கின்றாள்..



அப்போதுதான் சவரம் செய்த முகத்துடன் பேரனது ரங்கனுடைய உருவம் கொண்டு புன்சிரிப்போடு பாட்டிக்கு காட்சி தந்தான் இந்த மாயன்..!



தவித்துப்போன பாட்டி பதட்டம் தணிந்தாள். தனது இல்லம் திரும்பி பேரனுக்கு பழைய சோறும், மாவடுவும் படைத்தாள்.



இதனிடையே காவிரி கொண்டு சென்ற அவளது அசல் பேரனும் இல்லம் திரும்ப, மாயன் ரங்கன் மாயமானான்.



அரங்கனது அன்பு கண்டு, பாடடிக்கு எந்தவிதமான சந்தேகமும் வரக்கூடாது என்று சவரம் செய்த முகத்துடன் காட்சியளித்த அவனது கருணைக் கண்டு

திருவரங்கம் நோக்கி வணங்கியது ஜீயர்புரம்..!



இந்த நெகிழ்வு மிக்க அரங்கனின் அன்பினைப் பாரோர் அறிந்து மகிழவும், இந்நிகழ்வு மறந்துவிடாமலிருக்கவும், இன்றும் அரங்கன் ஜீயர்புரம் எழுந்தருளி அங்கு கருணையுடன் அனைவரையும் கடாக்ஷிக்கின்றார்.



ஜீயர்புரத்தில் காவிரிக்கரையில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். இந்த முதல் மண்டகப்படி அங்குள்ள “சவரத் தொழிலாளர்களின்“ மண்டகப்படி.



ஒரு காலத்தில் கருட மண்டபத்தில் பெருமாள் இத்திருநாளின் 2ம் திருநாளன்று எழுந்தருளியிருக்கையில், மிராசு சவரத் தொழிலாளியினால் நம்பெருமாளுக்கு நேர் எதிரே கண்ணாடி காட்டப்பட்டு அங்கு கண்ணாடியில் தெரிகின்ற நம்பெருமாளின் பிரதிபிம்பத்திற்கு சவரம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெற்று பின்பு அந்த சவரத் தொழிலாளி கௌரவிக்கபபட்டதாயும் இங்குள்ள நன்கு விஷயம் அறிந்த ஒரு பெரியவர் கூறுகின்றார். “எம்பெருமானார் வைபவத்தில்“ இந்நிகழ்வு உள்ளது என்கின்றார்.



இருந்திருக்கலாம்..! எவ்வளவோ நிகழ்வுகள் காலவெள்ளத்தில் கரைந்து போயுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாய் இருக்கலாம்.



ஆனால் இன்றும் பெருமாள் காவிரிக்கரைச் சென்று சேர்ந்ததும் அவருக்கு ஆகும் முதல் நிவேதனம் அன்று பேரன் ரங்கனாய் பெருமாள் பாட்டிக்குக் காட்சியளித்த போது படைத்தாளே “பழய சோறும் மாவடுவும்”. அதே போன்றுதான் இன்றளவும்..! - “பழய சோறும் மாவடுவும்"

Kodai Thirunal Utsavam - 2014

Kodai Thirunal Utsavam was held at Srirangapatnam for Sri Ranganatha Swamy. It is an annual event. This annual 3 days utsavam starts on Chaitra shudda dvitiai, the second day of the lunar calendar. Lord Sri Ranganathaswamy adorned with special chandanam (sandal paste) spends time in the evening at temple terrace and enjoys the vasanth ritu along with veda parayanam.





Veena Concert by Vidwan Prashanth Iyengar

  Thanks to vasudevan Charkravarthy for sharing this photos.

 

Wednesday, April 2, 2014

விஸ்வாமித்திரர்



ராமரின் திருமணத்திற்கு காரணமான விஸ்வாமித்திரர்!

தேவர் உலகம் அன்று அரண்டு போய் கிடந்தது. தேவர் தலைவன் இந்திரன், முகத்தில் வேதனை ரேகைகள் பரவிக்கிடந்தன. அவன் சக தேவர்களை அழைத்தான்.

தேவர்களே! பூமியில் ஒரு மானிடன், பெரும் தவம் செய்து, தேவர்களுக்கெல்லாம் தேவனாக வேண்டும், என சிவபெருமானை பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறான்.

அவனது தவத்தின் உக்கிரம் தாங்காமல் சிவலோகத்தின் ஒரு பகுதியே தீ ஜூவாலையால் கரைந்து கொண்டிருக்கிறது.

அது தேவலோகத்தை பற்ற வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களுக்குள், அவனது தவத்தை கலைக்காவிட்டால், நமக்கு இங்கு இடமிருக்காது.

சிவபெருமான் அவன் கேட்கும் வரத்தை கொடுத்து விடுவார். அவன் யார் என பார்த்து வந்து, என்னிடம் உடனே தகவல் சொல்லுங்கள், என்றான்.

அங்கேயிருந்த மூத்த தேவர் ஒருவர், மகாபிரபு! அவனது வரலாற்றை விபரமாகச் சொல்கிறேன், கேளுங்கள். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, பூமியில் மானிட அவதாரம் எடுக்கப் போகிறார்.

அவரது தேவியும் ஜானகி என்ற பெயரில் பூவுலகில் அவதரிக்கிறார். அவர்களை இணைத்து வைக்க, இந்த மானிடனை தவ வலிமை கொண்டவனாக பரமாத்மா மாற்றிக் கொண்டிருக்கிறார். இவன் வைராக்கிய உள்ளமுடையவன்.

வைராக்கியம் கொண்டவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள், என்றவர் சற்று நிறுத்தியவராய் மீண்டும் அவனது வரலாற்றை தொடர்ந்தார்.

தவம் செய்து கொண்டிருக்கும் இவன் ஒரு நாட்டின் அரசன். ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.

அங்கே தவரிஷி வசிஷ்டர், பர்ணசாலை அமைத்து தங்கி இருந்தார். அவரை வணங்கிய இவனை, மன்னன் என்ற முறையில் வசிஷ்டர் வரவேற்றார்.

தன் பர்ணசாலையில் படை பட்டாளத்துடன் தங்கி, ஏழு நாட்கள் விருந்தினராக தங்கும்படி வேண்டினார். அந்த இடம் மன்னனை மிகவும் கவர்ந்து விட்டது. அவனும் அங்கே ஒருவாரம் தங்கினான்.

தான் தங்கியிருந்த நாட்களில் பெண்ணின் முகமும், பசுவின் உடலும் கொண்ட அதிசய மிருகத்தை பார்த்தான்.

அந்த பசு பால் சொரிந்தது. அந்த பால், பதார்த்தங்களாகவும், அறுசுவை உணவாகவும் மாறியது. சிங்கமும், புலியும், கரடியும், மான்களுமாய் பார்த்து பழகிய அந்த அரசனுக்கு, இந்த வித்தியாசமான மிருகம் பிரமிப்பை ஊட்டியது.

இந்த மிருகத்தை ஊருக்கு கொண்டு சென்றால் நாட்டு மக்கள் நினைத்ததை எல்லாம் கொடுக்கலாம். பிற நாடுகளுக்கும் அனுப்பலாம்.

உலகமே பசிப்பிணியின்றி இருக்கும் எனக் கருதினான், என்ற முனிவரிடம், இந்திரன் ஆவல் மேலிட அப்புறம் என்ன ஆயிற்று? என்றான். முனிவர் தொடர்ந்தார்.

இந்திரனே! இவனது சிறப்பை இன்னும் கேள். காமதேனு மீது ஆசைப்பட்ட அந்த அரசன் வசிஷ்டரிடம், அந்த அதிசய மிருகத்தை தன்னிடம் தந்து விடும்படி வேண்டினான்.

வசிஷ்டர் சிரித்தவராய், மன்னா, இது என்ன சாதாரண பசுவா?

அனைவருக்கும் நீ நினைத்த போதெல்லாம் சோறூட்ட. இது தெய்வப்பசு. பாற்கடலை தேவர்கள் கடைந்த போது உருவானது.

இதற்கு சொந்தக்காரர்கள் தேவர்கள். அவர்கள் என்னிடம் இதை தந்து வைத்திருக்கிறார்கள்.

இருப்பினும் அது உன்னோடு வர விரும்பினால் தாராளமாக அழைத்துச் செல்லலாம், என்றார். அதன்படி மன்னன் காமதேனுவை அழைத்தான், என்று முனிவர் சொல்லிக் கொண்டிருக்கவும், ஓடிவந்தது காமதேனு.

இந்திரன் காமதேனுவிடம், காமதேனுவே! உன்னைப்பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம். நீயே வந்து விட்டாய், என்றதும் அனைத்தும் நான் அறிவேன் என்ற காமதேனு, இனி நான் அன்று நடந்த சம்பவங்களை தொடர்ந்து உங்களிடம் சொல்கிறேன், என்றது. அனைவரும் ஆவல் மேலிட்டவர்களாய், காமதேனு சொல்வதை கேட்க தயாராயினர்.

காமதேனு தனக்கு நேர்ந்த அனுபவத்தை எடுத்துக் கூற ஆரம்பித்தது. அந்த மன்னன் என்னிடம் வந்தான். என்னை தன்னோடு வரும்படி அழைத்தான்.

நான் வசிஷ்டரிடம் சென்று, நீங்கள் என்னை அவனுடன் போகச் சொல்லி இருக்கிறீர்களா? என்றேன். வசிஷ்டர் அப்படி ஏதும் சொல்லவில்லை என்றார்.

உடனே நான் அவனுடன் செல்ல மறுத்து விட்டேன். அவனுக்கு கோபம் வந்து விட்டது.

என் காட்டுக்குள் வசிக்கும் மிருகமான நீ, எனக்கே சொந்தம் எனச்சொல்லி என்னை தன் படைகளைக் கொண்டு கயிறால் கட்டிப் போட்டான், என்றதும், ஐயையோ! நீ எப்படி அந்த அரசனிடமிருந்து தப்பித்தாய், என்றனர் கூடியிருந்த தேவர்கள்.
அதை ஏன் கேட்கிறீர்கள்? நான் அவர்கள் கட்டிய கயிறை அவிழ்த்து, அவர்களை முட்டித் தள்ளினேன்.

அவர்கள் என்னை விடவில்லை. பின்பு என் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி, அந்த மன்னனுடன் வந்த படையினரை கொன்று விட்டேன்.

அந்த அரசன் அதைக் கண்டு மிரண்டு போய் விட்டான். நான் தெய்வப்பசு என்பதை அவன் உணரவில்லை.

பின்பு கோபமாக அவன் போய் விட்டான், என்றது. அதன்பிறகு நடந்ததை மூத்ததேவர் மீண்டும் தொடர்ந்தார். காமதேனு இப்படி செய்ததும், இந்த பசுவை அடைவது சாதாரணமானதல்ல என்பதை அரசன் உணர்ந்தான்.

அரச வாழ்வை விட முனிவராக இருப்பதே சகல உலகங்களையும் அடக்க சிறந்த வழி என்பதை தெரிந்து கொண்டான். அரச பதவியைத் துறந்து விட்டு, தவத்தில் ஈடுபட்டான்.

ஆண்டாண்டு காலமாக தவம் செய்த அவன், இப்போது சிவபெருமானையே பார்க்கும் வல்லமையை பெற்று விட்டான், என்று முடித்தார்.

இந்திரன், அந்த அரசனை சந்திக்க புறப்பட்டான்.

அந்த அரசன் நீண்ட நாட்களாக செய்த தவத்தின் வலிமையால் மிகப் பெரிய ஜடாமுடியை பெற்றிருந்தான்.

அவனது தவத்தை கலைக்காவிட்டால், தன் பதவிக்கு ஆபத்து ஏற்படுவது உறுதி என்பதை தெரிந்து கொண்டான்.

தன் மனதில் தேவலோக பூங்கொடி, திலோத்துமையை நினைத்தான். அவள் இந்திரன் முன்பு வந்து பணிந்து நின்றாள். அந்த அரசனின் தவத்தை கலைக்க, அவளை முயற்சி மேற்கொள்ள உத்தரவிட்டான்.

தேவேந்திரனின் கட்டளையை ஏற்ற அவள், முனிவர் முன்பு நின்று நடனமாடினாள்.

அரசன் தவம் கலைந்தான். தன் முன்பு நின்ற பேரழகு பெட்டகத்தை பார்த்து, மோன நிலையிலிருந்து மோக நிலைக்கு அவன் மனம் தாவியது.

தவத்தின் வலிமை அழிந்தது. ஆனால் சில நிமிடங்களிலேயே தன் பல்லாண்டு கால தவம் அழிந்ததை எண்ணி ஏங்கினான்.

இருப்பினும் அவன் செய்த தவம் வீண் போகவில்லை. அவன் அடுத்த ஜென்மத்தில் விஸ்வாமித்திரன் என்னும் பெரும் முனிவராக மாறினான்.

கிருஷ்ண பரமாத்மா ராமனாக பூமியில் அவதரித்ததும், ராமனை ஜனகராஜாவின் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, சீதையை மணம் முடிக்க ஏற்பாடு செய்தவர் இந்த விஸ்வாமித்திரர்.

செல்லும் வழியில் ராமனின் பாதம் பட்டு, கல்லாக இருந்த அகலிகை சாப விமோசனம் பெறவும் காரணமாக அமைந்தார் இந்த மாமுனிவர்.
 
Thanks to Indra Srinivasan

துருவன்

ஸ்வாயம்புவ மனுவின் குமாரன் உத்தானபாதன். அவருக்கு சுநீதி, சுருசி என்ற இரு மனைவிகள். சுநீதியின் மகன் துருவன்.

சுருசியின் மகன் உத்தமன். அரசனுக்கு சுநீதியிடம் பாராமுகம்; சுருசியிடமோ அடக்க முடியாத பற்று. ஒருநாள் துருவன் ஓடிவந்து தந்தையின் மடியில் அமர முயற்சித்த போது அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் சுருசி.

அரசரின் மடிமீது அமர நீ எனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டும். அந்தப் பாக்கியம் இல்லாத நீ இங்கிருந்து ஓடிவிடு.

அழுதுகொண்டே துருவன் தனது தாயிடம் சென்று நடந்ததைக் கூறினான். மகனே, எனது துரதிர்ஷ்டம் உன்னையும் பாதித்துள்ளது. வருந்தாதே, மனிதர்களின் மடியில் அமர்வதில் என்ன பெருமை உள்ளது துருவா?

நீ பகவானின் குழந்தை. அவரது மடியில் அமர முயற்சி செய். அவரைப் பார்க்கத் தவம் செய். தாயின் அறிவுரைப்படி, ஐந்தே வயதான துருவன் வனம் சென்றான்.

அங்கே நாரதர் அவனுக்குக் காட்சி தந்தார். துருவா! தந்தையின் அன்பைவிட மேலான அன்பு ஸ்ரீமந் நாராயணனிடம் கொள்ளும் அன்புதான்.

இந்த மந்திரத்தைப் பக்தியுடன் ஜபித்து வா என்று கூறினார். சுவாமி, நான் தன்யனானேன். அடியேன் எங்கு சென்று தவம் செய்வது என்று நாரதரிடம் துருவன் வினவினான். குழந்தாய், யமுனா நதி தீரத்தில் உள்ள மதுவனத்திற்குச் சென்று தவம் செய்.

உனக்கு ஸ்ரீமந் நாராயணனின் பரிபூரணமான அருள் கிடைக்கும். துருவன் ஒரு மரத்தடியில் அமர்ந்து, ஏகாக்ர சிந்தையுடன் ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தவம் செய்தான்.

சில நாட்கள் கழித்து அரசன் உத்தானபாதன், தான் செய்துவிட்ட தவறுக்காக வருந்தினான். ஐயோ, என்னவொரு மூடத்தனமான காரியம் செய்துவிட்டேன்.

ஆவலுடன் வந்த என் குமாரனைக் கட்டித் தழுவாமல் மனைவிக்குப் பயந்து ஒரு கோழையாகி விட்டேனே! குழந்தையின் மனம் என்ன பாடுபட்டதோ! அப்போது அவன் முன் நாரதர் தோன்றினார்.

வர வேண்டும் மகரிஷியே! தங்களை வணங்குகிறேன் என்று அரசன் வரவேற்றான். அரசே! உன் மகன் துருவன் மதுவனத்தில் தேவர்களும் அஞ்சும்படியான கடும் தவமியற்றுகிறான் என்பது உமக்குத் தெரியுமா?

என்ன! ஐந்து வயது பாலகனா வனத்தில் தனியாகத் தவம் செய்கிறான்? என்ன கொடுமை! நான் இப்போதே சென்று அவனை அழைத்து வருகிறேன் என்றான்.

அரசே! வருந்தாதே; துருவன் உனது மடியையும்விட மிக மேலான பதவியை அடையப் போகிறான். அவன் பகவானால் ரட்சிக்கப்படுவதால் நீ கவலைப்படாதே என்று நாரதர் கூறினார்.

இருந்தாலும் அவன் சின்னஞ்சிறு பாலகன், அவனால் கடும் தவத்தைத் தாங்க முடியுமா? என்று மன்னன் வருத்தமடைந்தான்.

நிச்சயமாக முடியும் அரசே, அவன் மிகுந்த ஈடுபாட்டுடன் தவம் செய்கிறான் என்று கூறிவிட்டு நாரதர் அங்கிருந்து சென்று விட்டார். காட்டில் தவம் செய்த துருவன் ஒரு மாதம் கனிகளை உண்டான்;

பிறகு ஒரு மாதம் கிழங்குகளை உண்டான்; அதன் பிறகு வெறும் இலைச்சருகுகளை உண்டான்; இறுதியில் காற்றை மட்டும் சுவாசித்துக் கடும் தவம் இயற்றினான்.

துருவனது தவத்தினால் பூவுலகு மட்டுமல்ல, தேவருலகும் தவித்தது. தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனிடம் சென்று முறையிட்டார்கள்.

பகவானே! துருவனின் தவம் எங்களை அக்னியாக எரிக்கிறது. தாங்கள் அவனுக்கு அருள் புரிய வேண்டும் சுவாமி என்றனர். வருந்தாதீர்கள் தேவர்களே!

துருவன் எம்மைத் தனது இதயத்தில் சிறைப்படுத்திவிட்டான். யாம் சென்று அவனுக்கு அருள் புரியும் காலம் வந்துவிட்டது.

ஆழ்ந்த தவத்தில் இருந்த துருவனுக்கு பகவான் ஸ்ரீவிஷ்ணு காட்சியளித்தார். துருவன் சிறுவனானதால், பகவானைத் துதிக்கக்கூட அவனுக்குத் தெரியவில்லை.

அதனால் பகவான் தமது பாஞ்சஜன்யம் என்ற சங்கினால் அவனது கன்னத்தை வருடினார். துருவன் ஞானம் பெற்றுப் பகவானைத் துதித்தான்.

குழந்தாய்! ராஜ்யத்தை விரும்பித் தவமியற்றினாய். ஆகையால் நீண்ட காலம் சகல சவுபாக்கியங்களுடன் ஆட்சியை நடத்தி வா. பிறகு அனைத்திற்கும் மேலானதும் நிலையானதுமான துருவ நட்சத்திரமாக என்றென்றும் ஒளிர்வாய்.

பகவானே! தங்களால் அனுக்ரஹிக்கப்பட்டேன். எனது தாய் தந்தையருக்கும் மோக்ஷமளித்து அருள் புரியுங்கள் என்றான். பகவான் அவ்வாறே அருளி மறைந்தார்.

துருவன் நாடு திரும்பினான். அரசன் உத்தானபாதன் உரிய காலத்தில் துருவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, வானப்பிரஸ்தம் சென்றார்.

காட்டிற்கு வேட்டையாடச் சென்ற துருவனின் தம்பி உத்தமன் ஒரு யக்ஷனால் கொல்லப்பட்டான். அவனைத் தேடிச் சென்ற அவனது தாய் சுருசி காட்டுத்தீக்கு இரையானாள்.

இதை அறிந்த துருவன் யக்ஷர்களின் மீது போர் தொடுத்தான். பாட்டனார் மனு கூறியதால், போரை நிறுத்திய துருவனிடம், யக்ஷர் தலைவனான குபேரன்... துருவா! போரை நிறுத்து. உனக்கு வேண்டும் வரம் அளிக்கிறேன்.

யக்ஷர் தலைவனே! பகவானிடம் திடமான பக்தியைக் கொடுங்கள். பக்தி செய்வதில் எனக்குச் சலிப்பே வரக்கூடாது.

நல்லது! அப்படியேயாகுக. துருவன் 36,000 ஆண்டுகள் அரசு புரிந்த பின் பகவானுக்கு மிக நெருங்கியவர்களான சுநந்த, நந்தர்கள் திவ்ய விமானத்துடன் துருவனை வைகுந்தத்திற்கு அழைத்துச் செல்ல வந்தனர்.

ஐயனே! என் தாயையும் என்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி வேண்டுகிறேன். மாமன்னரே, சற்று விமானத்தைப் பாருங்கள்.

தங்களது தாயார் முன்னரே அதில் அமர்ந்து உள்ளார். பகவானுக்குத் தங்கள் உள்ளக்கிடக்கை தெரியாதா? ஆஹா, என்னவொரு பேறு பெற்றோம் என்று அதிசயித்தான் துருவன்.

அந்த துருவனே இன்றும் துருவ நட்சத்திரமாக விளங்குகிறான்


thanks to Indra Srinivasan

Tuesday, April 1, 2014

நித்யனான ராமா......நித்யனான ராமா


 
ராமன் கதை கேளுங்கள் - ஸ்ரீ
ரகுராமன் கதை கேளுங்கள்!
(ராமன் கதை கேளுங்கள்)

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை
அவள் விழிகண்டு, குடிகொண்டு, மணமாலை தந்த
(ராமன் கதை கேளுங்கள்)

(சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே,
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை,
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க,
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி...
கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்)

ராமன் கதை கேளுங்கள் - ஸ்ரீ
ரகுராமன் கதை கேளுங்கள்!
(ராமன் கதை கேளுங்கள்)

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்
இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்

நடந்தாள்...சீதை நடந்தாள்
விழி மலர்ந்தாள்...சபை அளந்தாள்
வரவு கண்டு, அவள் அழகு கண்டு சிவ
தனுசின் நாணும் வீணை போல அறுந்தது!
(ராமன் கதை கேளுங்கள்)

வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார் - சிலர் எழுந்தார்
தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிட சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்

ஆஹா வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா?
ஆஹா வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா?
(ராமாய ராம பத்ராய ராமச் சந்தராய நமஹ)

தசரத ராமன் தான் தாவி வந்தான்
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்

படபட படபட படபட படபட
ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு!
ஜெயஜெய ராமா சீதையின் ராமா
ஜெயஜெய ராமா சீதையின் ராமா
தசரத ராமா ஜனகனும் மாமா
தசரத ராமா ஜனகனும் மாமா



சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராமா கல்யாண வைபோகமே!
சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராமா கல்யாண வைபோகமே!

காணக் காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராம கல்யாண வைபோகமே!

ராமனே அதோ பாரப்பா.....
அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை
அவள் விழிகண்டு, குடிகொண்டு, மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்!
ராமன் கதை கேளுங்கள்!

பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்!
பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
(பாதுகையே துணையாகும்)

நீதியும் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே
(பாதுகையே துணையாகும்)

உனது தாமரைப் பதமே
உயிர்த் துணை யாகவே
மனதினில் கொண்டே நாங்கள்
வாழுவோம் இங்கே ராமா!
பதினான்கு ஆண்டும் உந்தன்
பாதுகை நாட்டை ஆளும்
அறிவோடு சேவை செய்ய
அருள் வாயே ராமா!

த‌யாள‌னே சீதா ராமா! சாந்த மூர்த்தியே ராமா!
ச‌ற்குணாதிபா ராமா! ச‌ர்வ ர‌ட்ச‌கா ராமா!

தந்தை சொல்லைக் காக்கும் த‌ன‌ய‌னான ராமா!
தவசி போல கானிலே வாசம் செய்யும் ராமா!
தத்வ வேத ஞானியும் பக்தி செய்யும் ராமா!
சத்ய ஜோதி நீயே.......நித்யனான ராமா!
(நித்யனான ராமா......நித்யனான ராமா)
 

Thanks to Indra Srinivasan for sharing this.

ஸ்ரீமத் வல்லபாச்சார்ய விரசித மதுராஷ்டகம்



ஸ்ரீ-ஹரீ-ஓம்
(1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
இதழும் இனிதே! முகமும் இனிதே! -- கண்கள் இனிதே! சிரிப்பும் இனிதே!
இதயம் இனிதே! நடையும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(2) வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சொல்லும் இனிதே! குணமும் இனிதே! -- உடைகள் இனிதே! உடலும் இனிதே!
இயக்கம் இனிதே! உலவல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------

(3) வேணூர் மதுரோ ரேணூர் மதுர: - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
குழலும் இனிதே! கால் தூசி இனிதே! -- கைகள் இனிதே! பாதம் இனிதே!
நடனம் இனிதே! நட்பும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(4) கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
பாடல் இனிதே! பட்டாடை இனிதே! -- உண்ணல் இனிதே! உறக்கம் இனிதே!
உருவம் இனிதே! திலகம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------

(5) கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சேட்டை இனிதே! வெற்றி இனிதே! -- கள்ளம் இனிதே! உள்ளம் இனிதே!
எச்சில் இனிதே! வெட்கம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(6) குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
மணிகள் இனிதே! மாலை இனிதே! -- யமுனை இனிதே! அலைகள் இனிதே!
தண்ணீர் இனிதே! தாமரை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------

(7) கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆய்ச்சி இனிதே! ஆட்டம் இனிதே! -- கூடல் இனிதே! குணமும் இனிதே!
பார்வை இனிதே! பாவனை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(8) கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆயர் இனிதே! ஆக்கள் இனிதே! -- செண்டை இனிதே! பிறவி இனிதே!
வீழல் இனிதே! ஆழல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

இதி ஸ்ரீமத் வல்லபாச்சார்ய விரசித மதுராஷ்டகம் சம்பூர்ணம்
இங்ஙனம் வல்லபர் விளம்பிய இனியவை எட்டும் இனிதாய் நிறைவே!
Thanks to Indra Srinivasan for sharing this

Kodai Utsavam at Melkote











Thanks to Narasimhapriyan Nachi for sharing the photos.

Perumal purappadu and unjal sevai at tirukoshtiyur -Ugadi festival

யுகாதி பண்டிகை பெருமாள் புறப்பாடு மற்றும் ஊஞ்சல் சேவை












Thanks to Thirukkoshtiyur Vembu for sharing the photos.