நம்பெருமாள் கோலகலமாக ஐந்து திருநாட்களிலும், அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்து, அனைவரையும் ஆட்கொண்டு வருகின்றார்.
இந்த மண்டபத்திற்கு “அர்ச்சுன மண்டபம்“ என பெயர் வந்ததற்கு காரணம், துவாபர யுகத்தில் அர்ச்சுனன் இங்கு வந்து நம்பெருமாளை வழிபட்டதாக ஒரு குறிப்பு உள்ளது. பரசுராமரும் இங்கு விஜயம் செய்ததாகவும் சொல்வர்.
இந்த மண்டபத்தின் முகப்பில் ஒரு பெரிய மணி உள்ளது. இதனை “அரவணை மணி“ என்பர். இதன் ஒலி ஸ்ரீரங்கம் சப்த பிரகாரமும் ஒலிக்கும். அரையர்கள் குடும்பங்கள் குறைந்து போனதால், மிகுதியாக மிகுந்த அவர்களது ஏராளமான தாளங்களைக் கொண்டு, உருக்கி செய்ததாகும்.
ஒரு மிக மிக பழமையான தாளம், இன்னமும் அரையர்கள் குடும்பத்தில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு தாளத்தில் நாதமுனிகள் திருவுருவமும் இன்னொரு தாளத்தில் நம்மாழ்வார் திருவுருவமும், பொறிக்கப்பட்டிருக்கும். இது அநேகமாக ஸ்ரீமந் நாதமுனிகளின் மருமகன்கள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்கின்றனர்.
முகலாயர்கள் திருவரங்கத்தினை ஆக்கிரமிப்பு செய்த காலத்திலும் கூட அரையர்கள் கல்திரையிடப்பட்ட பெரியபெருமாள் முன்பு பாசுரங்கள் இசைத்ததாகச் சொல்வர். தாள ஓசை ஏதுமின்றி “கைத்தாளம்“ எனப்படும் கையினால் எழுப்பி தாளமிட்டு வரும் பழக்கம் அப்போதிலிருந்து ஏற்பட்டது என்பர்.
நம்பெருமாளை டெல்லியிலிருந்து அரையர்கள்தாம் மீட்டு வந்தனர் என்று பார்த்தோம் அல்லவா..! அந்த அரையர்களுக்கு வழிகாட்டி சென்றது ஒரு பெண்மணிதான்..! ஆம் அவள்தான் நம்பெருமாளை முகலாயர்கள் கொள்ளையடித்துச் சென்ற போது அவர்கள் பின்னாலேயே ஸ்ரீரங்கத்திலிருந்து அவர்களை பின்தொடர்ந்து சென்று, இருப்பிடம் கண்டறிந்து, மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பி, கோவிலார்களை அழைத்துச் சென்று மீட்டு வந்தாள்..! ஏதும் வசதியில்லாத ஒரு காலகட்டத்தில் இதற்கு எத்தனைத்துாரம் அவள் பிரயத்தனப்பட்டிருக்க வேண்டும்..! நினைத்து கூட பார்க்கமுடியவில்லை..! சரித்திரம் அவள் பெயரைக் கூட மறந்து விட்டது என்பதை நினைத்தால் மிகவே வேதனையாக உள்ளது..! அவளை “பின்தொடர்ந்த வள்ளி“ என்று கோவில் வரலாறுகள் தெரிவிக்கின்றன..!
இவ்வரிய தருணத்தில் அவர்கள்தாம் தியாகத்தினையும் போற்றுவோம்..! அரங்கனுக்கு பல்லாண்டு பாடுவோம்..!
தாஸன்
முரளீ பட்டர்
திரு மொழி ஐந்தாம் திருநாளான இன்று நம்பெருமாள் சாரி சாய கொண்டையும் என் திருமகள் சேரும் திரு மார்பன் என்னும் என்று நம்மாழ்வார் பாடியதற்கு இணங்க திருமார்பில் மகாலட்சுமி பதக்கம் சற்ற்யும் பூஜை கீர்த்தியும் அர்த்த சந்திர பிரபஹையும் மார்பில் சாற்றி கொண்டு பச்சை பட்டுடுத்தி பல்கலனும் அணிந்தும் அழகுக்கு அழகாய் கண்ணனை கண்ணார் அமுதாய் காட்சி அளித்தார் photo courtesy Rengarajan Ravi
by
Sudarsan Rao Bhoware
Thanks to Srirangam Today Community
for sharing this photo.
Very Nice and devotion eliciting information. "Pin Thodarndha Valli's" principles and efforts are unequaled
ReplyDeleteWith Respects
Adiyen
Thoopul Krishnaswami K.R.