Tuesday, March 4, 2014

மணக்கால் நம்பி






மணக்கால் நம்பி உய்யக்கொண்டாரின் மாணாக்கர்.

ஆளவந்தாரின் (யமுனைத்துறைவர்) ஆசிரியர். நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி திருவருள் புகட்டுமாறு தன் மாணாக்கர்

உய்யக்கொண்டாரைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் உய்யக்கொண்டாரால் தமது காலத்தில் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

அவர் திருநாடு அலங்கரிக்கும் முன்பு தம் ஆசிரியர் தமக்கு இட்ட பணியைத் தன் மாணாக்கர், மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். நம்பியும் தனக்களிக்கப்பட்டப் பணியினை நிறைவேற்றினார்.


Thanks to Indra Srinivasan for this post.

0 comments:

Post a Comment