Wednesday, May 7, 2014

Thirukkannamangai, Sri Bakthavathsala Perumal Brahmothsavam Day 1

Thanks to Rajagopalan Tsr swami for sharing the photos.

பெரும்புறக்கடலை அடலேற்றினைப்*
பெண்ணை யானை* எண்ணில் முனிவர்க்கருள் தருந்தவத்தை முத்தின் திரட்கோவையை* பத்தராவியை நித்திலத் தொத்தினை* அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை* அமுதம் பொதியின் சுவைக் கரும்பினை* கனியைச் சென்று நாடிக்* கண்ணமங்கையுட் கண்டு கொண்டேனே*

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதான " திருக்கண்ணமங்கை " திவ்ய தேசத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் " ஸ்ரீ அபிஷேக வல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு" நேற்று ஸ்ரீ ஜய வருஷம் சித்திரை மாதம் 26 ந் தேதி (05.05.2014) திங்கட்கிழமை மாலை " சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில்" தொடக்கமாக ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம் வெகு விமரிசையாக தொடங்கிற்று.

இன்று ஸ்ரீ ஜய வருஷம் சித்திரை மாதம் 23 ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.22 - 9.30 மணிக்குள் " மிதுன லக்னத்தில்" த்வஜாரோஹணம் சிறப்பான முறையில் நடந்தது. அதற்கு முன் காலை 7.45 மணிக்கு யாகசாலையிலிருந்து " கருடக் கொடி" வீதியுலா வந்து சரியாக 8.15 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி த்வஜஸ்தம்பம் அருகில் ஏளி ஸ்ரீ பெருமாள், கொடி க்கு திருவந்திக்காப்பு ஆகி மல்லாரியுடன் த்வஜாரோஹணம் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று மாலை சுமார் 7 மணியளவில் " ரக்ஷா பந்தனம்" ஆகி ஸ்ரீ பக்ஷிராஜன், ஸ்ரீ விஷ்வக்ஷேணர், ஸ்ரீ சக்ரத்தாழ்வார் புறப்பாடாகி " திக் பந்தனம்" ஆகி ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ உபயநாச்சிமார்களுடன் " கோ " ரதத்தில் திருவீதியுலா கண்டருளினார். பின் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், உபய நாச்சியார்க, ஸ்ரீ ஆண்டாளுடன் “ நூதன கண்ணாடி திருப்பள்ளி அறை” யில் திருப்பள்ளியறை சேவை நடந்தது. அவ்வமயம் ஏராளமான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.





































1 comments:

  1. We are Blessed to have this Sevai , sitting far away physically, but always with Sri Abhishekavalli Thayaar Samedha Sri Bhakthavathsal Perumaal by mind . Pray for His Blessings for ALL , esp the needy and suffering - Kombur Vankepuram Madhavan .

    ReplyDelete