Thursday, December 27, 2012

திருப்பாவை - 12

திருப்பாவை - 12

விடியர்க்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?

கேதார கெளள ராகம் , ஆதிதாளம்

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.

//எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி
இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்கும்
இதனால் வீடு முழுவது சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் வீட்டுத்தங்கையே !
பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள்
உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறோம்.
இராவணனைக் கொன்ற இராமனைப் புகழ் பாடுகிறோம்
நீ வாய்திறவாமல் தூங்குவதை எல்லா
வீட்டினரும் அறிந்து விட்டார்கள்.//

Thiruppavai - 12

Raga: Kedaragowla, Adi

O sister of a fortune-favored cowherd who owns cows with
boundless compassion, that pour milk from their udders at the
very thought of their calves, whose house is muddy due to shushing of milk.
We stand at your door step with dew dropping on our heads.
Come open your mouth and sing the praise of the lord dear to our heart,
who in anger slew the king of Lanka.
Atleast now wake up, why this heavy sleep ?
People in the neighbor know about you now!.

[ Picture shows Andal speaks to the girl about Rama and the episode how he killed Ravana. Andal also tells her heavy sleep may give people the impression of some transgression or impropriety on her part. She may incur the wrath of the neighborhood folk, who wait impatiently in the porch below]

0 comments:

Post a Comment