Friday, October 18, 2013

THIRUKKANNAMANGAI SRI DESIKAN 746TH THIRUNAKSHATHRA MAHOTHSAVAM,SATHUMURAI DAY‏

 
விஜய வருஷம் புரட்டாசி திருவோண நன்நாளில் காலை 7 மணி சுமாருக்கு 2 மைல் தொலைவில் உள்ள காவிரியின் கிளை நதியான "வெட்டாற்றில்" இருந்து புனித நீர் சுமார் 33 கடங்களில், 33 ஸ்வாமிகளால் எடுத்து குடை தீவட்டி, மேள வாத்ய கோஷ்டியுடன் திருவீதி முழுவதும் வலம் வந்து சந்நிதி முன் எழுந்தருளப் பண்ணி ஸ்தபனம் செய்யப்பட்டது.
ஸ்வாமிகளுக்கு சிறிது நேர ஓய்வுக்குப் பின் ததியாராதனை 10 மணிக்கு முடிந்து, சுமார் 11 மணிக்கு ஸ்ரீ ஹயக்ரீவன், ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனுக்கு வெளி மண்டபத்தில் விஸ்தார திருமஞ்சனம் மதியம் 1.30 வரை விசேஷமாக நடந்தது. உடன் ஸ்ரீ ஹயக்ரீவரை சந்நிதி உள் எழுந்தருளப் ப்ண்ணிவிட்டு, ஸ்ரீ தேசிகனுக்கு "கங்கையினும் புனிதமான தர்ஸ புஷ்கரிணி"யில் அபவிருதம்(தீர்த்தவாரி) ஆகி, உடனே விசேஷ அலங்காரம் செய்விக்கப்பட்டு ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்ந்திகளுக்கு புறப்பாடு ஆகி, ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதிகளில் மங்களா சாசனம் ஆனது.
 பின் ஸ்ரீ ஹயக்ரீவர்  மங்களாசாசனம் நடந்தது. அதன் பின் சுமார் 5.30 மணியளவில் திருப்பாவை சாற்றுமுறை நடந்தது.


அன்று சரஸ்வதி பூஜை ஆனதால், தாயார் புறப்பாடு, நவராத்ரி கொலு முடிந்து, சரஸ்வதி அம்மன் திருமஞ்சனம் ஆகி. ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் விசேஷ புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சுமார் 11.30 மணிக்கு ஸ்ரீ தேசிகன் ஸந்நிதிக்குஎழுந்தருளுவதற்கான புறப்பாடு ஆனது. விசேஷ ப்ரம்மாண்ட வெடி,  வாண வேடிக்கை, விசேஷ நாதஸ்வரக் கச்சேரியுடன் உள் ப்ரகாரத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலன் எழுந்தருளி ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி அருகில் எழுந்தருளியவுடன், ஸ்ரீ தேசிகன் வேத கோஷத்துடன், பஞ்சாயி, பட்டு, பரிவட்டம், மாலை இத்யாதிகளுடன் எதிர்கொண்டழைத்து பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதியை நோக்கி திரும்பி ஏளியவுடன், பட்டு பரிவட்டங்கள் சாற்றி ஆரத்தி ஆனதும்,  தஸாவதார ஸ்லோகம் 13ம்  ஒவ்வொரு ஸ்லோகமாக சேவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒவ்வொரு தளிகை, அதாவது சுமார் 25 KG சுக்கு ஏலம் கலந்த நாட்டுச் சர்க்கரை, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாராபருப்பு, முந்திரி, உலர் திராக்ஷை, பேரீச்சை, டைமன் கல்கண்டு, குண்டு சீனா கல்கண்டு, குழவு ஜீனி, தேங்காய் பூ, கொப்பரை தேங்காய் பல், அக்ரூட் பருப்பு, அத்திப் பழம், dirty fruity, முதலிய பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக நைவேத்யம், கற்பூரம், காளாஞ்சி செய்விக்கப்பட்டு, பின் அனைத்து த்ரவியங்களையும் ஒன்றாக கலந்து சேவிக்க வந்திருக்கும் அனைத்து சேவார்த்திகளுக்கும் சந்தனம், காளாஞ்சியுடன் இந்த ப்ரசாதம் விநியோகிக்கப்பட்டது.


பின் சந்நிதி மர்யாதை ஆகி, ஸ்ரீ பக்தவத்ஸலன் ஸ்ரீ தேசிகன் சந்நிதி உள் ஏளி, அலங்காரம் கலைத்து மறு அலங்காரம் ஆகி, நவநீதம் தளிகைஅமுது செய்யப்பட்டு திரை திறக்கப்பட்டது. அதன் பின் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு ஆஸ்தானத்தில் நடக்க வேண்டிய "நித்யானுஸந்தான" கோஷ்டி(சாய ரக்ஷை) ஸ்ரீ தேசிகன் ஸந்நிதியில் வடகலை ஸம்ப்ரதாயத்தில் "ராமானுஜ தயாபாத்ரம்" சொல்லி மந்த்ர புஷ்பத்துடன் நடந்தது.

துடர்ந்து ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் தேசிகன் சந்நிதிக்கு ஏளிய பின்(பெருமாள் முன்) சேவிப்பத்ற்காக நிறுத்தி வைக்கப்பட்ட(4000 பாசுரங்களில்) 400 பாசுரங்கள் தொடக்கத் தளிகையுடன் (அக்கார அடிசல்)தொடங்கியது. மறுநாள் அதிகாலை 6 மணியளவில் சேவாகாலம் முடிந்தது. பின் அனைத்து ஸ்வாமிகளும் நீராட்டம் ஆகி, திருப்பவாடை, இதர அனைத்து தளிகையுடன், 54 வகை பக்ஷணங்கள் திருமடப்பள்ளியிலிருந்து மேள வாத்யம், குடை, தீவட்டி, சாமரங்களுடன் உள் ப்ரகாரத்தில் ப்ரதக்ஷணமாக எடுத்து வரப்பட்டு, ஸ்ரீ தேசிகன் சன்னிதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், ஸ்ரீ ஹயக்ரீவன், ஸ்ரீ தேசிகனுக்கு தளிகைஅமுது ஆகி "பெரிய சாற்றுமுறை" சுமார் 2 மணி நேரம் நடந்தது. சாற்றுமுறை ஆனதும் பெருமாள், ஆழ்வார், ஆச்சார்யாள் ஸம்பாவனை மற்றும் வேத பாராயண அத்யாபக ஸ்வாமிகளுக்கும் பட்டாச்சார்கள், பரிசாரகாள் சம்பாவனை நடந்தது.

பின் கோஷ்டி விநியோகம் ஆனது. சந்நிதி மர்யாதை, அர்ச்சனகள் ஆனதும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் " பனி முக்காட்டு" சேவையுடன் மதியம்  சுமார் 1.30 மணிக்கு ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார்.  அதன்பின் முதல்நாள் இரவு நடக்கவேண்டிய அர்த்தஜாம பூஜை நடந்தது.
உடன் ஸ்ரீ தேசிகன் கடைசி வேளை விடையாற்றி புறப்பாட்டுடன் 746வது மஹோத்ஸவம் இனிதே முடிவுற்றது.

இரவு விஜய தசமி குதிரை வாகனத்தில் பெருமாள் ஏளி அம்பு போட்டு வந்ததும் ஸ்ரீ தேசிகன் விடையாற்றி உத்ஸவம் நடந்தது.  
 
Thanks to Dr.T.S.R.RAJAGOPALAN

0 comments:

Post a Comment