Pages - Menu

Wednesday, January 1, 2014

Namperumal Athyayana utsavam pagal pathu day 1

Photo courtesy :Rengarajan Ravi
 தொடங்கியது பெரும் திருநாள் ,,திருமொழி திருநாள் பகல் பத்தின் முதல் திருநாளன(1 / 1 / 14) இன்று நம்பெருமாள் அழகே உருவேடுதவராய் ஒப்பாரும் மிக்காரும் இல்லா மா மாயனாய் சுந்தர பாண்டியன் கொண்டையும் ரெங்க விமான பதக்கமும் தரித்து ரத்ன அபயஹச்தமுடன் புலி நக மாலை சாற்றி அடியார்க்கு இறங்கும் பெருமாளை அர்ஜுன மண்டபத்தில் பேரானந்த காட்சியினை வழங்கி கொண்டு இருகின்றார் என்னே அரங்கனின் அழகு ஆஹா !ஆஹா! ஆஹா

by
Sudarsan Rao Bhoware 



வைகுந்த ஏகாதசி - பகல் பத்து முதல் திருநாள் 1.1.2014

ஆங்கில புத்தாண்டு பிறக்கும் இந்நாளில் இயல்,இசை,நாடகம் என முத்தமிழுக்கும் ஏற்றம் தரும் இனிய தமிழ் மறை விழாவான வைகுண்ட ஏகாதசியின் முதல் திருநாள் இங்கு ஸ்ரீரங்கத்தில் கோலகலமாக ஆரம்பமாகின்றது.

இது அரங்கன் திருவரங்கத்தில் அமர்ந்தது முதல் வேத உத்ஸவமாக, எல்லா உத்ஸவங்களைப் போலவே, பத்து நாட்கள் நடைபெற்று வந்தது. ஆகமரீதியாக இதனை “மோக்ஷ உத்ஸவம்“ என்பர். இதனை வேதகோஷத்துடன், தமிழ் மறையான, வேதம் தமிழ் செய்த மாறன், நம்மாழ்வாருக்கு ஏற்றம் தரும் உத்ஸவமாக மாற்றியமைத்த பெருமை திருமங்கை மன்னனைச் சாரும். தாம் பாடிய திருநெடுந்தாண்டகத்தினை அரங்கன் முன்பு பாடி, அவனை குளிர்வித்து, யாசித்து பெற்ற, பெரும்பேறுடைத்த உத்ஸவம் இதுவாகும். இத்திருநெடுந்தாண்டகம் இருபெரும் பேற்றினை, திருவரங்கத்திற்கு ஈந்துள்ளது. ஒன்று இந்த அத்யயன உத்ஸவமாகும். இரண்டாவது ஸ்ரீபராசரபட்டர், இத்திருநெடுந்தாண்டகத்தினால்தான், கா்நாடகத்தில் வாழ்ந்த “வேதாந்தி“ எனும் தர்க்க சாஸ்திரியினை வென்று, அவரை தம் சீடராக்கி “நஞ்சீயர்“ என்னும் புகழ்மிக்க ஆசார்யனை தந்துள்ளார்.

இதனை நினைவில் கொண்டு, ஸ்ரீமந் நாதமுனிகள் பகல்பத்து உத்ஸவத்திற்கு முந்தைய தினம் “திருநெடுந்தாண்டகம்“ அமைத்து, பின்னர் நம்மாழ்வார் தவிர்த்து ஏனைய ஆழ்வாருக்கும் ஏற்றம் தரும் விதமாக பகல் பத்து திருநாட்களை ஏற்படுத்தி, இதுநாள் வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை செம்மைப்படுத்தியவர்கள் எம்பெருமானாரும், மணவாளமுனிகளும் ஆவர்.

இன்று பெரியாழ்வாரின் காப்பு பாடலான திருப்பல்லாண்டு பாடி, நாலாயிர திவ்ய பிரபந்தத்தினின்று, முதலாயிரத்திலுள்ள, அரங்கனையே மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வாரின் 212 பாசுரங்களோடு கோலகலமாக ஆரம்பமாகின்றது.



by
Murali Battar

2 comments:

  1. Thanks. Nice and easily assimilable narration.
    Does Erappattu start and centre round Nammazwar?
    With Respects
    Adiyen
    Thoopul Krishnawami K.R.

    ReplyDelete
  2. In later years, Sri Vedanta Desikar restarted the adyayana utsavam in Srirangam which was not in practice then. However his name is not mentioned above.

    ReplyDelete