Pages - Menu

Thursday, January 9, 2014

Namperumal adhyayana utsavam pagal pathu Day 9

வைகுண்ட ஏகாதசி - 9ம் திருநாள் - (9.1.2014)

பெரிய பெருமாளுக்கு ரத்னங்கியும் முத்தங்கியும் ஏககாலத்தில் பெறப்பட்டது அல்ல..! ராணி மங்கம்மாள் ரங்கனுக்கு சாற்றி மகிழ்ந்தது ரத்னங்கியாகும். இதை ரங்கனுக்குச் சாற்றி பல ஆண்டுகள் கழிந்த பின்பே, விஜயரங்க சொக்கநாதர், பெரியபெருமாளுக்கு, முத்தங்கியினைச் சாற்றி, மகிழ்ந்தார். ஈடு இணையில்லாத ரத்னகற்கள் பொறிக்கப்பெற்ற. இந்த ரத்னங்கிக்கு வலுசேர்த்து மீண்டும் புதுப்பித்தார், 19ம் நுாற்றாண்டில், கோவில் டிரஸ்டியாகயிருந்த குவளக்குடி சிங்கமய்யங்கார் ஆவார். இவர் டிரஸ்டியாகயிருந்து அரங்கனுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.

நம்பெருமாளுக்கும் ஒரு முத்தங்கி உண்டு. அதைத்தான் அரங்கன் இன்று சாற்றிக் கொண்டுள்ளார். கனுப் பொங்கல் அன்று அரங்கன் மீண்டும் இதனைத்தான் அணிவார்.

இதே போன்று தாயாருக்கும் முத்துப்பாவாடை உண்டு.

முத்தங்கியோடு பெரியபெருமாளை தரிசிக்கும் போதெல்லாம், ரங்கன்தான் “க்ஷீராப்தி நாதன்“ (திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவன்) என்பதும் உறுதியாகும். இந்த கூற்றினை உறுதி செய்வது அரங்கனது முதற் பிரதட்சிணமாக விளங்கும் “திருவெண்ணாழி“ என்னும் சுற்றாகும்.

திரு - திருமால்
வெண் - வெண்மையான
ஆழி - கடல்
(“திருவெண்ணாழி“ இச்சொல்லை தெளிவுபடுத்திய திரு ராஜா தேசிகன் அவர்கட்கு நன்றி)


by 
Murali Bhattar
 Photo courtesy : Rengarajan Ravi

பகல் பத்து ஒன்பதாம் திருநாள் முது குறி உற்சவத்தை முன்னிட்டு நம்பெருமாள் முத்துஅங்கி சாற்றி கொண்டு சேவை சாதித்தார் முத்தான அரங்கனுக்கு முத்தங்கி சேவை  
by 
Sudarsan Rao Bhoware


Photo courtesy: Sundar bhattar

 

No comments:

Post a Comment