Photo thanks to Rengarajan Ravi
ஸ்ரீரங்கத்தின் வரலாற்றில், நாம் என்றென்றும் போற்றி நினைவு கொள்ளும் வகையில், சிறப்பு பெற்ற பெண்மணிகள் ஏழு பேர்...! (வேறு எவரேனும் உள்ளனரா..?)
பெரியாழ்வாரின் பெண்பிள்ளை ஆண்டாள்
குலசேகராழ்வாரின் பெண்பிள்ளை குலசேகரவல்லி.
சுரதாணி எனும் பீவி நாச்சியார்
பின்தொடர்ந்த வல்லி.
கூரத்தாழ்வாரின் துணைவியார் ஆண்டாள்.
கோவில் தாஸ்யை வெள்ளையம்மாள்.
பெரியநம்பிகளின் மகள் நப்பின்னை.
இவர்கள் அனைவரும் அரங்கனுக்காகவோ அல்லது அரங்கன் மீது அதீத அன்பு கொண்டவர்களுக்காக செய்த தியாகம், நாம் என்றும் போற்றி வணங்குதலுக்குரியது. இவர்கள் அல்லாது சரித்திரத்தில் இடம் பெறாத எத்தனை தியாகச்சுடர்களோ..!
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், சத்துணவு அமைச்சராக திரு. சௌந்தரராஜன் இருந்த சமயம், இந்த மார்கழி மாதத்திற்காக பெரிய பெருமாளுக்கு நான்கு வெல்வெட் அங்கிகள் வழங்கினார். அதில் 1) கீதா உபதேசம் 2) சுயம் வயக்த க்ஷேத்திரங்கள் 3) தசாவதாரம் 4) அஷ்ட லக்ஷ்மி ஆகியவை சமிக்கி வேலைப்பாட்டினால் அற்புதமாக அமைந்திருந்தது. “கிருஷ்ணாஜி“ என்ற நிறுவனத்தின் மூலமாக செய்து வந்தது. அப்போது திரு. சௌந்திரராஜன் அவர்கள், “இவை அனைத்தும் ஒரு முஸ்லீம் அன்பரால் செய்யபட்டது. நம் அரங்கனைப் பற்றி நன்கு அறிந்து, அவரும் இவரிடத்து ஆட்பட்டு, கடுமையான விரமிருந்து செய்தது முரளீ..!” என்று சொன்னபோது, அரங்கனின் அன்பு எங்கெல்லாம் பரவி பாய்கிறது என்று நினைத்து மிகவே மகிழ்ந்தேன். இன்றும் அவைகள் நேர்த்தியாக, புத்தம் புதிது போல் இருத்தலைக் காண்கையில் அந்த முஸ்லீம் அன்பரின்
ஈடுபாடும், அன்பும், பெயர் தெரியாத அவரை நினைவு கூறச் செய்கிறது..!
அரங்கனின் அன்பு அலை அலையாய் பாய்வது..! என்றும் ஓய்வில்லாதது..!
by Murali bhattar

No comments:
Post a Comment