Pages - Menu

Saturday, January 11, 2014

Namperumal adhyayana utsavam pagal pathu Day 10

பகல் பத்து பத்தாம் திருநாள் நம்பெருமாள் நாச்சியார் திருகோலம் கண்டருளுகின்றார் பெண்ணாகி இன்னமுதம் வஞ்சித்த பெருமாள் என்று ஆழ்வார்கள் பாடியதற்கு இணங்க நம்பெருமாள் இன் அமுதமாய் திருமுடி அழகா ! சாற்றிய சடை தான் அழகா ! இல்லை சூடிய மாலை தான் அழகா ! நின் கிளி கொஞ்சும் முகம் அழகா ! இல்லை நின் கை பிடித்த கிளி தான் அழகா என்ன வென்று வர்ணிக்க என் கண்ணமுதே பென்னமுதமாய் இருக்கும் உன் வடிவழகை சொல்ல அரங்கசா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! photo courtesy Rengarajan Ravi

by
Sudarsan Rao Bhoware

வைகுண்ட ஏகாதசி - 10ம் திருநாள் (மோகனாவதாரம்)

எல்லையில்லா அன்பைப் பொழிவதும் பெண்மையே..! அளவு கடந்த அட்டகாசத்தினை ஒழிப்பதும் பெண்மையே..! வைணவத்தில் பெண்மையின் பக்தி ஈடு இணையற்றது..! அளவற்ற காதலால் அரங்கனோடு ஜோதிர்மயமாய் கலந்தவர்கள் இருவர்.. ! ஒருவர் திருப்பாணாழ்வார் மற்றொருவர் ஆண்டாள்..!

அரங்கன் ஆசைப்பட்டு ஏற்றுக்கொள்ளும் ஒரே மாறுவேடமும் இந்த “மோகனாவதாரம்“ மட்டுமே..! ஆழ்வார்கள் அரங்கனைத் தாயாகவும் கொண்டாடியுள்ளனர். “திருவரங்கத்தாய்“ என போற்றியுள்ளனர்..!

“த்வமேவ மாதா ச பிதா த்வமேவ -
த்வமேவ பந்துஸ்ச சகா த்வமேவ,
த்வமேவ வித்யா திரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவா..”

”நீயே எனக்கு தாய், தந்தை, சகோதரன், பந்து, கல்வி, செல்வம் மற்றும் அனைத்துமே..!”

இவையனைத்திலும் தாயாக பாவிப்பது அவனது எல்லையற்றக் கருணையை நம்பால் பொழிய வைக்கும். ஏனெனில் நாம் எப்படி அவனை பாவிக்கின்றோமோ, அப்படி அவன் மாறும் சுபாவமுள்ளவன். (யத் பாவோ - தத் பவதி..!) தாய் - இயற்கையிலேயே பாசம் மிகுந்தவள் ஆவாள். ஆகவே அரங்கனைத் தாயாக பாவிப்பது சிறந்த பக்தி.

இத்திருநாளில் இத்திருவரங்கத்தாயின் திருவடி பணிவோம்..! உய்வு பெறுவோம்..!



by Murali Bhattar 

 photo by Pavithra Madhavan

No comments:

Post a Comment