இத்துடன்
இணைத்திருக்கும் பத்திரிகையின்படி எதிர்வரும் 01.01.2014 முதல் 10.01.2014
வரை பகல் பத்து உத்ஸவமும் 11.01.2014 முதல் 20.01.2014 வரை இராப்பத்து
உத்ஸவமும் விமரிசையாக நடக்க உள்ளது.
பகல்
பத்து உத்ஸவத்தில் தினசரி காலை திருமஞ்சனம், சேவாகாலம் சாற்றுமுறையும்,
மாலை 5 மணிக்கு உள் ப்ரகாரம் எனப்படும் இரண்டாவது ப்ரகாரத்தில் ஸ்ரீ
பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.
9ம் உத்ஸவத்தன்று "பெரியாண்டான்" சிறப்பு எனப்படும் மூலவர் திருவடி திருமஞ்சனமும் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதலும் நடைபெறும்.
10.01.2014 அன்று " மோஹினி அலங்காரப் புறப்பாடு" நடைபெறும்.
11.01.2014
அதிகாலை 5 மணிக்கு "(வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு)சொர்க்க வாசல்" திறப்பு
நடைபெறும். சொர்க்க வாசல் திறந்து பெருமாள் "செண்பகப் ப்ரகாரம்" எனப்படும் 3
வது ப்ரகாரத்தில் பெருமாள் எழுந்தருளுவார்.
12.01.2014 - 20.01.2014 வரை தினசரி
இரவு 7 மணிக்கு பெருமாள் " சொர்க்க வாசல் " வழியாக 3வது ப்ரகாரத்தில்
புறப்பாடாகி எழுந்தருளுவார்.
20.01.2014 இராப்பத்து
சாற்றுமுறை அன்று நம்மாழ்வார் திருவடி தொழுதல் நடந்து சாற்றுமுறை ஆனதும்
பெருமாள் உள் ப்ரகாரத்தி ஏளி "சொர்க்கவாசல்" சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்று
உத்ஸவம் பூர்த்தி ஆகும்.
Dr.T.S.R.RAJAGOPALAN, (Raja),
No comments:
Post a Comment